மேண்டலின் யு ஸ்ரீனிவாஸ் காலமான தினமின்று
மேண்டலின் யு ஸ்ரீனிவாஸ் காலமான தினமின்று
மேண்டலின் இசையில் குழந்தை மேதையாக இருந்து இசைக்கலைஞராக வளர்ந்த மேண்டலின் யு ஸ்ரீனிவாஸ், இதே செப் 19ல் காலமானார். அப்போது அவருக்கு வயது 45. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததை அடுத்து அவர் காலமானார்.
1969 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று பிறந்த உப்பலப்பு ஸ்ரீனிவாஸ் என்ற இவர் ஆந்திர பிரதேசம் மாநிலம் பாலக்கோல் பகுதியை சேர்ந்தவர். அவர் தனது இளம் வயதிலேயே தனது தந்தை சத்தியநாராயணா அவர்களின் மேன்டலினில் ஒரு விசித்திரமான ஆர்வத்தை காட்டியதை அடுத்து அவரது தந்தை அவருக்கு மேன்டலின் இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொடுத்தார்.
1978ஆம் ஆண்டில் முதல் முறையாக பொது மேடையில் தனது இசை கச்சேரியை துவங்கிய அவர் மிகவும் பிரபலமானார். பத்மஸ்ரீ விருது, சங்கீத நாடக அகாதமி விருது போன்ற மதிப்புமிக்க விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
இவரது இசையின் மூலாதாரமான கர்நாடக இசையில் இவர் புகழ் பெற்று திகழ்ந்தார். மேற்கத்திய இசைக்கருவியை ஒரு கர்நாடக இசை மேடையில் அற்புதமாக வாசித்து பண்டிதர்களையும் பொது மக்களையும் இவர் பிரமிப்பில் ஆழ்த்துவார்.
இவர் இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளின் முன்னணி இசைக் கலைஞர்களான ஜாண் மெக் லெளக்லின், மைக்கேல் நெய்மென் மற்றும் மைக்கேல் ப்ரூக் ஆகியோருடன் இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
Comments