தொலைந்து போன லட்சுமியின் அருள் பரி பூரணமாக கிடைக்கும்..*

 


பெண்கள் தினமும் இதை மட்டும் செய்தால் போதும்..தொலைந்து போன லட்சுமியின் அருள் பரி பூரணமாக கிடைக்கும்..*


மேற்கத்திய கலாசாரத்தில், பேஷன் உலகில் மூழ்கி போய் விட்டோம். இதனால், தலையில் பூ சூடி கொள்வது, நெற்றியில் குங்குமம் இடுவது ஓல்டு பேஷன் ஆகி விட்டது.



பொதுவாக நம் வீட்டு



பெண்கள், தலையில் பூ சூட்டி கொண்டு, நெற்றியில் குங்குமம் இட்டு வந்தால், மகாலட்சுமியின் மறு உருவம் என்று தான் கூறுவோம். சில பெண்களை பார்த்தவுடனே நல்ல லட்சுமி கடாச்சம் நிறைந்திருக்கும்.இதனால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். நல்ல அழகான பெண்களை திருமணம் செய்து வீட்டில் கூட்டி வரும் போது மஹாலக்ஷ்மி போல இருக்கிறாள் என்றும் கூறுவார்கள்.


ஆனால், இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், பேஷன் உலகில் மூழ்கி போய் விட்டோம். இதனால்,  தலையில் பூ சூடி கொள்வது, நெற்றியில் குங்குமம் இடுவது ஓல்டு பேஷன் ஆகி விட்டது.  இப்போது எல்லாம் பெண்கள் யாரும் தலையில் பூ சூடிக் கொள்வதே இல்லை. ஏன் தலைமுடியை பின்னுவது கூட இல்லை. லூஸ் கேர் பேஷன்னாக மாறிப்போய் விட்டது. 




இதனால் வீட்டிற்கு நல்லது இல்லை, வீட்டில் தரித்திரம் தாண்டவமாடும். நீங்கள் தலை முடியை இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு எப்படி வேண்டுமென்றாலும் சீவிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் எப்படி வாரினாலும் தலையில் ஒரு கொத்து பூவாது வைக்க வேண்டும்.இதை ஆன்மீக ரீதியாக பார்க்காமல், அறிவியல் பூர்வமாகவும் பெண்கள் தலையில் பூ வைப்பதில் நன்மை இருக்கிறது என கூறியிருக்கிறார்கள். 



தலையில் பூ வைப்பதென்றால் பின் மண்டை கழுத்து அருகே தான் வைக்க வேண்டும். ஏனென்றால் அங்கு தான் கூம்பு சுரப்பி (Pineal gland) இருக்கிறது.இது நாம் தலையில் பூ வைக்கும் போது அந்த பூவின் மனமானது, இந்த சுரப்பியின் வழியாக நம் உடலுக்குள் சென்று நம் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும்

வைத்திருக்கும்.



ஆகையால் தான் பெரியவர்கள் பெண்கள் கட்டாயமாக தலையில் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். இது பெண்களின் மன உளைச்சலை பெருமளவு குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இது அறிவியல் பூர்வமான உண்மை. 





ஆனால் ஆன்மீகத்தில் இந்த மலர்களை தலையில் தினமும் சூடி கொள்வதால் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்றாலே போதும். மகாலட்சுமி அருள் கிடைத்தது என்றாலே நம் வாழ்க்கை அத்தனை சௌபாக்கியங்களும் கிடைத்தது என்று அர்த்தம். அதுவும் வாசனை மிகுந்த மலர்களான மல்லிகை, ரோஸ் போன்றவை இருந்தால் மிகவும் நல்லது

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி