*சதுர்புஜ கருடாழ்வார்!*

 



*சதுர்புஜ கருடாழ்வார்!*


நன்றி குங்குமம் ஆன்மிகம்


கும்பகோணம் அருகிலுள்ள வெள்ளியங்குடி பெருமாள் கோயிலில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி சதுர்புஜ கருடாழ்வார் அமைந்திருக்கிறார். இவரை வழிபட்டால் கிரக தோஷம், விஷபயம் நீங்கும். வாமனர் வடிவில் தோன்றிய மகாவிஷ்ணு, மூன்றடி மண்ணை தானம் கேட்டு மகாபலி சக்கரவர்த்தியிடம் வந்தார். வந்திருப்பவர் கடவுள் என்பதை அறியாமல் அவனும் சம்மதித்தான். தானம் கொடுப்பதை தடுக்க விரும்பிய அசுரகுருவான சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி, வாமனரின் தாரா பாத்திரத்தின் (கெண்டி) துவாரத்தில் தீர்த்தம் வராமல் தடுத்தார்.


வாமனர் தர்ப்பை புல்லால் துவாரத்தைக் குத்தவே, வண்டான சுக்கிராச்சாரியாரின் பார்வை பறிபோனது. சதுர்புஜ கருடாழ்வாரை வழிபட்ட சுக்கிராச்சாரியார் மீண்டும் பார்வை பெற்றார். இதன் காரணமாக இந்த தலம், வெள்ளியங்குடி என பெயர் பெற்றது. `வெள்ளி’ என்பது சுக்கிராச்சாரியாரின் பெயர்களில் ஒன்று. கருவறையில் அணையா தீபமாக இவர் இருக்கிறார்.


வெள்ளிக்கிழமையில் இங்கு வழிபட்டால் பார்வை குறைபாடு, சுக்கிர தோஷம் நீங்கும். மூலவரின் பெயர் கோலவில்லி ராமர். உற்சவர் சிருங்கார சுந்தரர். தாயாரின் திருநாமம் மரகதவல்லி. கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட நிலையில் மூலவர் இருக்கிறார். திருமேனியில் வர்ணம் பூசியபடி இருக்கும் இவருக்கு, பாற்கடல்நாதர் என்றும் பெயருண்டு.செல்லும் வழிகும்பகோணம் - அணைக்கரை சாலையில், சோழபுரம் 8 கி.மீ. இங்கிருந்து பிரியும் சாலையில் 6 கி.மீ., தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது.


தொகுப்பு - எஸ்.இராமதாஸ்...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்: