தினத்தந்தி நாளிதழ் அதிபரும், இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான சிவந்தி ஆதித்தன், பிறந்த நாளின்று. 💐


 தினத்தந்தி நாளிதழ் அதிபரும், இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான சிவந்தி ஆதித்தன், பிறந்த நாளின்று.

💐
இந்திய துணைக்கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், ஆதித்தனார்–கோவிந்தம்மாள் தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். 1936 செப்டம்பர் 24ஆம் தேதி பிறந்த சிவந்தி ஆதித்தன், சென்னை ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் படித்த பின், மாநிலக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து, பி.ஏ. பட்டம் பெற்றார்.
கல்லூரியில் படிக்கும் போது தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தளபதியாக இருந்ததுடன், சென்னை மாநகரில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் என்.சி.சி. படைகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சி.பா.ஆதித்தனார், 1942ல் தினத்தந்தியைத் தொடங்கி, பத்திரிகை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். எளிய மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை உண்டாக்கினார். தந்தையைப் பின்பற்றி, பத்திரிகைத் துறையில் சிவந்தி ஆதித்தன் ஈடுபட்டார்.
அதிபரின் மகனாக இருந்தபோதிலும், அச்சுக் கோர்ப்பவராக, அச்சிடுபவராக, பார்சல் கட்டி அனுப்புகிறவராக, பிழை திருத்துபவராக, நிருபராக, துணை ஆசிரியராக (பத்திரிகையின் அனைத்து துறைகளிலும்) சிவந்தி ஆதித்தன் பயிற்சி பெற்றார். ஒரு சிறந்த பத்திரிகையாளராக பட்டை தீட்டப்பட்ட பிறகு, நிர்வாகத் துறையிலும் பயிற்சி பெற்றார்.
பா.சிவந்தி ஆதித்தனிடம் 1959ஆம் ஆண்டு, ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பை ஆதித்தனார் ஒப்படைத்தார். அச்சமயத்தில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி வெளிவந்து கொண்டிருந்தது. சிவந்தி ஆதித்தனின் நிர்வாகத் திறமையில், தினத்தந்தி நாளுக்கு நாள் வளர்ந்து, இப்போது பெங்களூர், மும்பை, புதுச்சேரி உள்பட 15 நகரங்களில் இருந்து வெளிவருகிறது. அதிக விற்பனையுள்ள தமிழ் நாளிதழ் என்ற பெருமையை 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது தனி சமாச்சாரம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,