பிறந்த நாள் பரிசாக வைர மோதிரம்
52 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், அதாவது 1970ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் படப்பிடிப்புக்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஹாங்காங்கில் இருந்தார் நாகேஷ்.
அப்போது படப்பிடிப்பு குழுவினருக்கு சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்து நாகேஷே எதிர்பாராத வகையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக வைர மோதிரம் அணிவித்து இன்ப அதிர்ச்சி அளித்தார் மக்கள் திலகம். இது அப்போது பத்திரிகைகளில் செய்தியாகவும் வந்தது. தினத்தந்தி, மாலைமுரசு பத்திரிகையில் ஹாங்காங் எனபதில் 'ஹா' வடமொழி என்பதால் 'ஆ'ங்காங் என போட்டிருந்தார்கள்.
- ஸ்ரீதர் சுவாமிநாதன்
Comments