*ஃபேஷியல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!*

 


*ஃபேஷியல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!*


ஆர்கானிக் ஃபேஷியல், கோல்டன் ஃபேஷியல், பியேர்ல் ஃபேஷியல், டைமண்ட், ஹைட்ரா ஃபேஷியல், ஒயின் ஃபேஷியல், ஃபுரூட் ஃபேஷியல், சக்லேட் ஃபேஷியல், என எத்தனையோ ஃபேஷியல்கள் உள்ளன. பார்லருக்குச் சென்று ‘என் முகம் கொஞ்சம் பார்க்க நல்லா இருக்கணும்’ என சொல்லிவிட்டால் முடிந்தது ஜோலி. அவர்களிடம் இருக்கும் அத்தனை ஃபேஷியலையும் நம்மிடம் காண்பித்து குழப்ப நிலைக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள்.


கடைசியில் ‘ஃபேஷியலே வேண்டாம்ப்பா வெறும் ஐப்ரோவை மட்டும் நறுக்கி விடு’ என்னும் அளவுக்கு சோர்வடைந்துவிடுவதும் நிகழும். சரி ஃபேஷியல் எப்படி தேர்வு செய்ய வேண்டும்?, யாருக்கு என்ன ஃபேஷியல்? எதற்கு முதலில் ஃபேஷியல் விவரமாகச் சொல்கிறார் பியூட்டிஷியன் மற்றும் செலிபிரிட்டி மேக்கப் ஆர்டிஸ்ட் ரம்யா அழகேந்திரன்.


ஃபேஷியல் பயன்கள்


பெரும்பாலும் 45 நாட்களுக்கு ஒரு முறை ஃபேஷியல் செய்வதால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு. முகத்தில் சுருக்கம் வராமல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி முகத்தை புத்துணர்ச்சியாக வைக்கவே ஃபேஷியல் செய்யப்படுகிறது. அரோமோதெரபி ஃபேஷியல், நறுமண எண்ணெய் கொண்டிருக்கும் ஃபேஷியல், முகப்பருக்களை குறைக்கும் ஃபேஷியல், சுருக்கத்தை தடுக்கும் ஃபேஷியல் என்று பலவகைகள் இருப்பினும் பொதுவாகவே எந்த ஃபேஷியலிலும் செய்யப்படும் விதவிதமான ஃபேஷியல் மசாஜ்களால் முக அக்குப் பிரஷர் பாயிண்ட்கள் தூண்டப்பட்டு பல நாட்கள் உண்டான சோர்வு, அசதி, தலைவலி, கழுத்து தோள்பட்டை வலிகள், வேலைப்பளுவால் உண்டாகும் மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு சின்ன தீர்வு ஃபேஷியலில் கிடைக்கும். சருமத்தின் அக்குப் பஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதால் ரத்த ஓட்டம் உடல் முழுக்க சீராகும். ஓரிரு தினங்கள் ஆழ்ந்த தூக்கம் கூட கிடைக்கும்.


ஃபேஷியல் தேர்வு


முதலில் நம் சருமம் எப்படிப்பட்டது என்கிற தெளிவு நமக்குத்தான் இருக்க வேண்டும். சாதாரண சருமம், ஆயில் சருமம், வறண்ட சருமம், சென்சிட்டிவ் சருமம், கலவையான சருமம் இவைகள்தான் பொதுவான சரும வகைகள். இதிலே எந்த வகை சருமம் உங்களுடையது என்பதைப் பொருத்துதான் ஃபேஷியல். ஒருவேளை உங்களுக்கு என்ன சருமம் என்பது இன்றளவும் தெரியவில்லை எனில் ஒரு சரும நிபுணரைச் சந்தித்து ஆலோசனைகள் பெறலாம். சில ஹைடெக் பார்லரிலேயே நிபுணர்கள் தெளிவாக ஆலோசனைக் கொடுக்கவும் செய்வார்கள்.


சாதாரண சருமம்


இவர்களுக்கு என்ன வகையான ஃபேஷியலும் யோசிக்காமல் செய்யலாம். நிறைய ஃபேஷியல் வகைகள் கூட முயற்சி செய்தும் பார்க்கலாம். எனக்கு எந்த காஸ்மெடிக்ஸ் அலர்ஜியும் இல்லை என்போர்தான் இந்த சாதாரண சருமம் கொண்டவர்கள். கோல்டன், லைட்டனிங், டைமண்ட், முத்து, ஹைட்ரா என அந்தந்த சீசனுக்கு ஏத்த ஃபேஷியல்களும் கூட முயற்சி செய்யலாம். உதாரணத்திற்கு கோடை காலம் எனில் சருமத்தில் ஈரப்பதம் உறிஞ்சப்படும், நிறம் கருக்கும் அவர்கள் டி-டான் ஃபேஷியல் மற்றும் ஹைட்ரா ஃபேஷியல் செய்துகொள்ளலாம். ஒரு திருமணம் , விசேஷங்கள் எனில் கோல்டன் , பிரைடல் ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.

 

வறண்ட சருமம்


வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு நிறைய இறந்த செல்கள் பிரச்னைகள் இருக்கும். மேலும் சருமம் துவாரங்களும் பெரிதாக இருக்கும். இந்தப் பிரச்னையை சரி செய்யக் கூடிய ஃபேஷியல்களை எடுத்துக் கொள்ளலாம். அரோமா ஃபேஷியல் சிறப்பான தீர்வு கொடுக்கும். மேலும் சரும துவாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க சீக்கிரமே சருமம் வயதான தோற்றம் கொடுத்திடும். சருமத்தில் ஈரப்பசை. மேலும் வனப்பு இதெல்லாம் அதிகரிக்க அரோமா ஃபேஷியல் சிறப்பான தேர்வு. மேலும் இவர்களுக்கு  ஆன்டி-ஏஜிங் ஃபேஷியல் செய்யலாம். இதில் வைட்டமின் சி சேர்த்துக் கொள்வோம். ஒயின் ஃபேஷியலும் சிறப்பான தேர்வு. குறிப்பாக முகத்தில் ஆயிலை மொத்தமாக எடுக்கும் ஃபேஷியலை இவர்கள் தவிர்ப்பது நல்லது.


சென்சிட்டிவ் சருமம்

 

எந்த காஸ்மெட்டிக் பயன்பாடும் இந்தச் சருமம் கொண்டவங்களுக்கு அலர்ஜியை உண்டாக்கிவிடும். அவர்களுக்கு வெறும் ஃபிரஷ் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் கொண்டு ஃபேஷியல் செய்யலாம். மேலும் ஆர்கானிக் முறைகள் கொண்டு செய்கிற எவ்வித ஃபேஷியலும் எடுத்துக் கொள்ளலாம்.


ஆயில் சருமம்


இவர்களுக்கு முகம் பிரகாசமாக மாற வேண்டும். மேலும் ஆயில் காரணமாக முகம் எப்போதும் ஒருவித சோர்வு, அல்லது புத்துணர்வு இல்லாதது போல் காணப்படும். இவர்கள் டைமண்ட், கோல்டன், பியர்ல், என ஃபேஷியல்கள் தேர்வு செய்யலாம். அல்லது லைட்டனிங் ஃபேஷியலும் கூட எடுத்துக்கொள்ளலாம்.

 

கலவையான சருமம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,