"கொடுமுடி கோகிலம்'



🔥
"கொடுமுடி கோகிலம்' என்கிற கே.பி. சுந்தராம்பாள் காலமான தினமின்று🥲
இருபதாம் நூற்றாண்டு தமிழர்தம் வரலாற்றில் தனியொரு இடம் பிடித்தவர் கே.பி. சுந்தராம்பாள். நடிகையாக, பாடகியாக, நாட்டுப்பற்றுடைய தியாகியாக எல்லாவற்றுக்கும் மேலாக அமர காதலுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர்தான் இந்த கே.பி.எஸ்
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில், 1908 அக்டோபர் 11ல், கிருஷ்ணசாமி - பாலம்பாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் கே.பி.சுந்தராம்பாள்.வேலுநாயர் - ராஜாமணி நாடக குழுவின், 'நல்லதங்காள்' நாடகத்தில் ஆண் வேடமேற்று, பாடி, நடித்து பிரபலமானார். அதை அடுத்து கொழும்பில், 'வள்ளி திருமணம், கோவலன், ஞானசவுந்தரி, பவளக்கொடி' உள்ளிட்ட நாடகங்களில் நடிச்சார்.
தாயகம் திரும்பி மீண்டும் கொழும்பு சென்ற போது, பிரபல நடிகர் ஜி.கிட்டப்பாவுடன் இணைஞ்சு நடிக்க வேண்டிய சூழல் வாய்த்தது. அப்போது இருவரும் காதலித்து, 1926ல் திருமணம் செஞ்சுகிட்டாய்ங்க. கிட்டப்பா, 1933ல், தன், 28வது வயதில் காலமானார். 25 வயதான சுந்தராம்பாள், அன்று முதல் வெள்ளை புடவை கட்டத் துவங்கினார்.
பின், 1934ல் 'நந்தனார்' நாடகத்தில், ஆண் வேடமேற்று நடித்தார். தொடர்ந்து, பக்த நந்தனார், மணிமேகலை, அவ்வையார், பூம்புகார், திருவிளையாடல், கந்தன் கருணை உள்ளிட்ட படங்களில் பாடி, நடித்து புகழடைந்தார்.
தமிழ் இசை மாநாடு, காங்கிரஸ் மாநாடுகளில் பாடிய இவர், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.
நாட்டின் உயரிய, 'பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற இவர், 1980ல் இதே நாளில், தன், 71வது வயதில் காலமானார்.
நாட்டிலேயே முதன் முதலாக, 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நடிகையின் நினைவு தினம் இன்று!
 From The Desk of கட்டிங் கண்ணையா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,