அவமானங்கள்தான் ஒரு மனுஷனை பண்படுத்தும்.

 


அப்போ நான் வளர்ந்து வரும் பாடகன். அம்பிகாபதின்னு ஒரு படம். 1957ன்னு நினைக்கிறேன். அதுல ஒரு டுயட் பாடல். என் கூட பாடப் போகிறவர் பானுமதி. அப்போ அவர் தெலுங்குலயும் தமிழ்லயும் முன்னணி நடிகை. நன்றாகப் பாடுவார். விஷயஞானமுள்ளவர். ஆனால் கர்வமிக்கவர். இங்கே நான் அவரை தவறாகச் சொல்லவில்லை. ஜி.ராமனாதன் இசையில ’மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு’ என்ற பாடலை இருவரும் பாட வேண்டும். ரிக்கார்டிங் வந்தவர் என்னோடு பாடப்போவது யார் என்று கேட்டார். என்னை அறிமுகப்படுத்தினார்கள். உடனே அவர் முகம் சுளித்துக் கொண்டே, ’புதியவர்களையெல்லாம் ஏன் என்னோடு பாட வைக்கிறீர்கள்?’ என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டார். மாண்டு ராகத்தில் அமைந்த

அருமையான
பாடல் அது. ரிகர்சலில் பாடுவதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டார். அப்போதெல்லாம் வாத்திய கருவிகளோடு பாடகர்களும் முழுப்பாடலையும் பாட வேண்டிய கட்டாயம். சுமார் நான்கு நிமிடப் பாடல் அது. சரியாகப் பாட அவர் பதின்மூன்று டேக்குகள் எடுத்துக் கொண்டார். எல்லா டேக்குகளிலும் நான் தம் பிடித்துப் பாடிக் கொண்டே இருந்தேன். எந்த இடத்திலும் நான் விடவில்லை. பொறுமையாக பாடினேன். ஆனால் பதினான்காவது டேக்கில் மட்டும் நான் ஓரிடத்தில் சின்ன தவறு செய்து விட்டேன். அதுவரை பதின்மூன்று டேக்குகளுக்கு காரணமான பானுமதி, ‘’இதுக்குத்தான் புதியவர்களோடு பாடக் கூடாது’’ என்று சொல்லி விட்டு, கோபித்துக் கொண்டு ரிக்கார்டிங் தியேட்டரை விட்டு போய் விட்டார். எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள். பிறகு அடுத்த நாள்தான் அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது. இப்படி பலபேரிடம், பல இடங்களில் அவமானப்பட்டுதான் இந்த டி எம் எஸ் இப்படி வளர்ந்திருக்கான். அவமானங்கள்தான் ஒரு மனுஷனை பண்படுத்தும். எந்த இடத்திலும் நம் பொறுமையை இழக்கக் கூடாது…’’
- டி எம் எஸ்
(பத்திரிகையாளர் Kalyan Kumar பதிவிலிருந்து)
-ஷாஜி சென் முகநூல் பதிவு
May be an image of 1 person
hers
1

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,