உலக மூங்கில் தினம்
இன்று உலக மூங்கில் தினம்
ஆண்டுதோறும் செப்., 18ம் தேதி உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மூங்கில் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வளிமண்டலத்தில் ஊடுருவும் புற ஊதா கதிர்களை தடுத்து நிறுத்தும் சுற்றுச்சூழல் காவலனாக மூங்கில் காடுகள் விளங்குகின்றன.
மூங்கில்களுக்கு இயற்கையிலேயே பாக்டீரியாக் களையும், பூஞ்சைகளையும் எதிர்க்கும் சக்தி இருக்கிறது. வீடு கட்ட, ஏணிகள் செய்ய மூங்கில்கள் பயன்படுகின்றன. கூடை, நாற்காலி, திரைகள் எனப் பல பொருட்களில் மூங்கில் பயன்படுகிறது. பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மூங்கில் பொருட்கள் பயன்பாட்டை அதிகரிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்., 18ல் உலக மூங்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மூங்கிலில் 1400 வகைகள் உள்ளன. இதன் ஆயுட்காலம் 60 ஆண்டுகள். ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்.மூங்கிலினால் நன்மைகளே உள்ளது. மூங்கிலினால் ஏற்படும் நன்மைகள் வனத்தை வளமாக்கும், அதனை வைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும். மூங்கிலினால் கிடைக்கும் எந்தப் பொருட்களும் தீங்கானவையோ, சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவையோ அல்ல. ஆகவே வீடுகள் தோறும் நாம் பச்சைத் தங்கத்தை வளர்க்கலாம்..!
Comments