நடிகர் திலகம் சின்னப்பா தேவர் மகளுக்கு கொண்டு வந்த வரன்

 


1966ல் சிவாஜி சின்னப்பா தேவரிடம் திருமணம் விசயமாக வந்தது

1966ல், எம்.ஜி.ஆர்., ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துக் கொண்டிருந்த காலம். சிவாஜி கணேசன் மார்க்கெட் மொத்தமாக காலியானது போன்ற சூழல்! இந்நிலையில், அன்று, தேவர் அலுவலகத்திற்கு வேகமாக வந்து கொண்டிருந்தார் சிவாஜி கணேசன். படிய வாரப்பட்ட தலை, நெற்றியில் விபூதி, வழக்கமான பைஜாமா, ஜிப்பா, இதழ்களில் புன்சிரிப்பு! வருவது அவர் தானா என ஆச்சரியமாக பார்த்தனர் அங்கிருந்தோர். சிவாஜி கணேசனைப் பார்த்த தேவர், ‘என்ன முருகா… இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்துருக்கீங்க…’ என்றார். ‘நல்ல விஷயமாத்தேன் வந்துருக்கேண்ணே…’ என்றார் சிவாஜி கணேசன். தொடர்ந்து தேவரின் அறையில் ஒலித்த உற்சாகம் கலந்த உரையாடல், கதை இலாகாவை எட்ட, அவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ள வராண்டாவுக்கு வந்தனர். ‘அண்ணே… சிவாஜி இங்க எதுக்காக வந்துருக்காரு… உங்களுக்கு ஏதாவது தெரியுமா…’ என எடிட்டர் பாலுராவைக் கேட்டனர். அவர் தெரியாது என்றதும், ‘பத்மஸ்ரீ விருது கிடைச்சுருக்கில்ல… அதுக்கு ஆசிர்வாதம் வாங்க வந்திருப்பார்…’ என்றும், ‘இப்ப சிவாஜி கணேசனோட மார்க்கெட் அவுட்டுப்பா… மோட்டார் சுந்தரம்பிள்ளை கூட, இந்தியில வசூல் ஆன மாதிரி, இங்கே போகாதுங்கறாங்க; புதுப்படம் எதுவும், ‘புக்’ ஆகலே. அதான் வாய்ப்பு கேட்டு வந்திருப்பார்…’ என்றும் ஆளாளுக்கு கருத்துக் கூறினர்.
சிவாஜி கணேசனை வழியனுப்பி விட்டு வந்த தேவர், ‘இங்கே என்னப்பா செய்யறீங்க… நான் சொன்ன சீனை யோசிச்சீங்களா…’ என்று குரலை உயர்த்தினார். ‘அண்ணே… சிவாஜி இப்ப எதுக்காக வந்தாருன்னு சொன்னாத் தான் எங்களுக்கு வேலை ஓடும்…’ என்றனர். ‘என் பெரிய பொண்ணு சுப்புலட்சுமிக்கு, கணேசன் வரன் கொண்டு வந்துருக்காருப்பா. நாம அவருக்கு தொழில் கொடுக்கலன்னாலும், அவருக்கு என்மேல ஒரு தனிப் பாசம் இருக்கத் தான் செய்யுது. அவரே வீடு தேடி வந்து பேசிட்டுப் போறாரு…’ என்று கணேசனை, புகழ்ந்து தள்ளினார் தேவர். மாப்பிள்ளை ஆர்.தியாகராஜனின் மூத்த சகோதரர் சேது, பொள்ளாச்சியில் பிரபல வணிகர்; சிவாஜி கணேசனின் நண்பர். கணேசனின் முயற்சியால்,
ஜூன் 1,1966ல் தேவர் மகள் சுப்புலட்சுமி, திருமதி தியாகராஜன் ஆனார். அதாவது அவ்வளவு நெருக்கம் இருந்தும், எம்ஜிஆரை வைத்து, இந்தி-ரீமேக் படங்கள் எடுத்தார் என்பது கவனிக்கத் தக்கது.
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,