சரித்திரம் படைத்த மகாநடிகன் திலகன் மறைந்த நாளின்று

 


சரித்திரம் படைத்த மகாநடிகன் திலகன் மறைந்த நாளின்று

🥲
திலகன் ஒரு பிறவிக் கலைஞன் என்று சொன்னால் மிகை அல்ல. நினைவு தெரிந்த நாள் முதல் நடிப்புதான் தனது வாழ்க்கை என படிக்கிற காலத்திலேயே தன்னை உருமாற்றிக் கொண்ட ஒரு மாபெரும் கலைஞன். சட்டென்று தன் உடல்மொழியை, ஆளுமையை, நடிப்பை, குரலை மாற்றி முற்றிலும் ஒரு புதிய ஆளுமையக் கொண்டு ஒரு ரசவாதத்தை நிகழ்த்திய அற்புதமான நடிகர் திலகன்.
1935ம் ஆண்டு கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள அயிரூர் கிராமத்தில் பிறந்தவர் திலகன். அவருக்குள் நடிகனாக வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது சிறுவயதில் அவர் பார்த்த ஜூலியஸ் சீஸர் நாடகம் தான். ஆரம்பகாலத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய திலகன் 1972ம் ஆண்டு கந்தர்வசேத்ரம் என்கிற படத்தில் அறிமுகமானார்.
இந்தப்படத்தில் மிகச்சிறிய வேடத்தில் தோன்றிய திலகனை பெ‌ரிதாக யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவரை முன்னிலைப்படுத்திய திரைப்படம் 1979ல் கே.‌ஜி.ஜார்‌ஜின் இயக்கத்தில் வெளிவந்த உள்கடல். அதன் பிறகு திலகன் என்ற நடிகன் மக்களின் மனதை மெல்ல ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்.
1981ல் யவனிகா திரைப்படத்துக்காக திலகன் தனது முதல் மாநில விருதை பெற்றார்.
தந்தையாக திலகன் நடித்த கதாபாத்திரங்கள்தான் கணக்கில் அடங்காதவை. மம்முட்டி, மோகன்லாலில் தொடங்கி பிருத்விராஜ் வரை அத்தனை ஹீரோக்களுக்கும் அப்பாவாக நடித்து கேரளாவில் பெரும் புகழ் பெற்றவர். அதில் மறக்க முடியாத ஒன்றுதான் ஸ்படிகம் படத்தில் மோகன்லாலின் தந்தையாக இடம்பெற்ற கணக்கு வாத்தியார் வேடம். மகனை தவறாக புரிந்துகொண்டு அதனால்தான் அவன் ரவுடியாக மாறினான் என்று புரியாமல் மகனை எதிரியாகவே பாவிக்கும் தந்தையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் திலகன்.
அதேபோல திலகன் நடித்த திரைப்படங்களில் ‘க்ரீடம்’ ஒரு மைல்கல். இப்படி ஒரு அப்பா நமக்கு இருக்கக்கூடாதா என்று ஒவ்வொரு மகனையும் ஏங்கவைக்கும் நடிப்பு.
ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாக கூடுவிட்டு கூடு பாய்வதில் திலகன் அசகாயசூரர். தனக்கென உடல் மொழியையோ, மேன‌ரிஸங்களையோ அவர் உருவாக்கிக் கொண்டதில்லை. கதாபாத்திரம் எதை கேட்கிறதோ அதை மட்டுமே பிரதிபலித்தவர் திலகன்.
எண்பதுகளின் இறுதியில் சினிமாவில் வில்லன்கள் புதுப்பரிமாணம் பெற்றார்கள். மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் ஒயிட் அண்ட் ஒயிட் ஜெண்டில்மேன் வில்லன்களை உருவாக்கத் தொடங்கினார்கள். ‘சத்ரியன்’ இன்றுவரை நினைவுகூறப்படுவதற்கு, விஜயகாந்தின் போலீஸ் கம்பீரத்தோடு, அண்ணாச்சி அருமை நாயகமாக நடித்த திலகனின் அலட்டிக்கொள்ளாத நடிப்பும் “நீ மறுபடியும் வரணும் பன்னீர்செல்வம்.. பழைய ஐ.பி.எஸ். பன்னீர்செல்வமா வரணும்” என்ற அவரது தனித்துவமான குரலும்தான் காரணம்.
திலகன் இயல்பிலேயே கம்யூனிஸ சிந்தனைகளில் ஊறிப்போனவர் என்பதால், அவ்வப்போது மலையாள திரையுலகின் போக்கை அப்பட்டமாக கண்டித்து தன்னுடைய இடத்தை தானே அடுத்தடுத்து சிக்கலாக்கிக் கொண்டவர். ஒரு கட்டத்தில் மலையாள திரையுலகமே இவருக்கு எதிராக நின்றபோதும் கூட, ரசிகர்கள் இவரை கடைசி வரை கைவிடவில்லை.
இவர் பலமுறை சிறந்த துணை நடிகருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திலகன், 2முறை தேசிய விருதும், 9முறை கேரள மாநில அரசு விருது, 2முறை பிலிம்பேர் விருதும் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் திரைத்துறையில் இவரது சேவையை பாராட்டி 2009ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது திலகனின் உடல்நிலை குறித்து மோசமான செய்திகள் வரும். அவ்வளவுதான், முடிந்தது அவரது மூச்சு என்றெல்லாம் கேள்விப்படும்போது, மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்துவந்து மேக்கப்போடு படப்பிடிப்புத் தளத்தில் நிற்பார். இதய நோயோடு மிகக்கடுமையாக அவர் போராடிக்கொண்டிருந்த கடைசி காலக்கட்டதிலு

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி