# கேட்ராக்ட்…
# கேட்ராக்ட்………
🔯# வரஎன்னகாரணம் ……❓
🇹🇷 போதிய விழிப்புணர்வு இல்லாததே. கண்பார்வை இழக்க காரணம்❗❗❗
🔰 கேட்ராக்ட் (cataract) என்பது கண் வில்லையில் (lens) ஒளி ஊடுருவும் தன்மையைக் (transparency) குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். கண்ணில் திரை விழுந்துள்ளது என்றும் சொல்வதுண்டு. திரை என்றால், தோல் சுருக்கம் / கண்புரை என்று இரு பொருள் கொள்ளலாம்.
பொதுவாக நமது கண்களிலுள்ள லென்ஸ் புரோட்டின் மற்றும் நீரினால் ஆனது. புரோட்டின் ஒரே மாதிரியான வரிசையில் உருவாகிக் கொண்டிருக்கும். இதனால்தான் நமது பார்வை சீராகவும், தெளிவாகவும் தெரிகிறது.
வயது ஆக ஆக அந்த புரொட்டின் சீராக உருவாகாமல் ஒரே இடத்தில் மாறி மாறி கூட்டமாக உருவாகும் போது அது திசுப்போல் உருவாகிறது. அதுதான் கேடராக்ட்.
அது புரோட்டின் சேர சேர வளர்ந்து பெரிதாக காண்பிக்கிறது. இதனால் கண்பார்வை தெரியாமல் போய்விடும்.
நமது கண்களின் லென்ஸும் கேமராவப் போலத்தான். தூரமாக தெரியும் பொருட்களையும் குவித்து தெளிவாக காண்பிக்கிறது.
👉 40 வயது ஆனபின்னே சிலருக்கு கண்பார்வை மெல்ல குறைய ஆரம்பிக்கும்.
👉 ஏறக்குறைய 50-80 சதவீத மக்கள் கேட்ராக்டால் கண் பார்வையை இழக்கிறார்கள்.
.
🔰 # அறிகுறிகள்
➡ பார்வை மங்கலாக தெரியும்.
➡ வெளிச்சத்தை அல்லது சூரியனை பார்க்கும் போது, இரவுகளில் வாகன விளக்குகளை பார்க்கும் போது அதிகப்படியாக கண் கூசும்.
➡ திடீரென மாறு கண் ஏற்படும்.
.
🉐 # இதில்மூன்றுவகைகள்_உள்ளன
1,♈ சப்-கேப்ஸுலார் கேடராக்ட்..♈
இது லென்ஸின் பின்பகுதியில் உண்டாகிறது. அதிகபடியான ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது இந்த வகை கேடராக்ட் வரலாம்.
2,🉐 நியூக்ளியர் கேடராக்ட்..🉐
இது லென்ஸின் மையப்பகுதியிலுள்ள நியூக்ளியஸில் ஏற்படும். வயதாவதால் உண்டாகும்.
3,🈺 கார்டிகல் கேடராக்ட்..🈺
இது லென்ஸை சுற்றியும் இருக்கும் கார்டெக்ஸ் பகுதியில் உண்டாகும்.
.
🈵 # காரணங்கள்
◀சர்க்கரை வியாதி,
◀இரத்த அழுத்தம்,
◀மரபணுக்கள்,
◀சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள்,
◀உடல் பருமன்,
◀புகைப் பழக்கம்,
◀ஸ்டீராய்டு மருந்துகள்,
◀கண்களில் அடிபடுவதால்,
◀அதிக அளவு மையோபியா (கிட்டப்பார்வை)
இவையெல்லாம் கேடராக்ட் உருவாவதற்கான காரணங்கள்.
.
💚 # தடுக்கும்_முறைகள்
- விட்டமின் சி நிறைந்த உணவுகள், நெல்லிக்காய், ஒமேகா-3 அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகள் கேடராக்ட் வராமல் தடுக்கும்.
- வெளியே செல்லும் போது கண்களை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க சன் கிளாஸ் அணிவது முக்கியம்.
- விட்டமின் ஈ நிறைந்த உணவுகள்,
- மீன், சூரிய காந்தி எண்ணெய், பாதாம், எல்லா வித கீரைகள் கேடராக்ட் வராமல் தடுக்கும்.
.
🇨🇭# கண்பார்வைகுறைபாடு_நீங்க
💊முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்.கண் பார்வை குறைபாடு நீங்கும்.
💊கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும்.
கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.
💊முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
💊இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.
💊வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
💊முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
💊இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவவேண்டும. இது கிராமங்களில் முன்பு செய்து வந்த வீட்டு வைத்தியம்.
💊மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது.இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது.ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து ,மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.
❌பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
💊மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
❌உச்சி வெயிலில் அலையக் கூடாது.
.
🇨🇭#முதுமையில்_ஏற்படும்………
பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர். இது குணமாக
👉முருங்கை விதை – 100 கிராம்
👉மிளகு – 100 கிராம் இரண்டையும்
நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத் தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம் சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.
Comments