*தமிழக பத்திரப் பதிவுத்துறையில் மென்பொருள் வேகம் அதிகரிப்பு:
*தமிழக பத்திரப் பதிவுத்துறையில் மென்பொருள் வேகம் அதிகரிப்பு: ஒரே நாளில் 36,000 பேர் வில்லங்க சான்று பெற்றனர்*
சென்னை: பொதுமக்கள் புகார் எதிரொலியாக பதிவுத்துறையில் மென்பொருள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மட்டும் 36 ஆயிரம் பேர் வில்லங்க சான்றிதழ் விபரங்களை பெற்றுள்ளதாக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் வெளியிட்டுள்ள அறிக்கை: பதிவுத்துறையால் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்டார் மென்பொருள் மெதுவாக இயங்குவதாக பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை மேற்கொண்டு மென்பொருளின் செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவண விபரங்களை உள்ளீடு செய்தல், ஆன்லைன் கட்டணம் செலுத்துதல், டோக்கன் பெறுதல், வில்லங்கச்சான்று மனு மற்றும் ஆவண நகல் மனு செய்தல் போன்ற வசதிகளை இணையதள வழி சென்று பெறுவதற்கு, பொதுமக்கள் தங்கள் பெயர், மின்னஞ்சல், கைபேசி எண் விபரங்களை அளித்து உள்நுழைவினை போன்று உருவாக்கிக்கொண்டு பயன்படுத்தும் வண்ணம் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வில்லங்கச் சான்று விவரம் இலவசமாக பார்வையிடும் வசதி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வசதியினைப் பெற விரும்புவோர் தங்களுடைய அடையாளத்தினை உறுதி செய்யும் வகையில் இணையதள உள்நுழைவினை உருவாக்கிக்கொண்டு பயன்படுத்தும் வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இவ்வசதியினை பயன்படுத்தி நேற்று பிற்பகல் 3 மணி வரை 35,678 வில்லங்கச்சான்று விபரங்களை பொதுமக்கள் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்துள்ளனர். பொதுமக்கள் வழக்கம் போல் கணினி, கைபேசி போன்ற உபகரணங்களின் வழியாக இவ்வசதியினை பதிவுத்துறை இணையதள உள்நுழைவில் சென்று பார்வையிடலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது....
Comments