இருமல்,சளிக்கு இயற்கை மருத்துவம்இருமல்,சளிக்கு இயற்கை மருத்துவம்


மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது எனவே இக்காலத்தில் இருமல்,சளி,காய்ச்சல் ஆகியவை வரும் வாய்ப்பு அதிகம்.எனவே இவற்றை சரிசெய்வதற்கான இயற்கை மருத்துவக்குறிப்பு பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்


சுக்கு , சித்தரத்தை,அதிமதுரம் ஆகிய ஒவ்வொன்றிலும் சிறிய துண்டு (ஒரு இன்ச் அளவு)

மிளகு _ அரைத்தேக்கரண்டி

திப்பிலி _ கால் தேக்கரண்டி,

,வேலிப்பருத்திப்பொடி மற்றும் ஆடாதொடைப்பொடி தலா அரைத்தே க்கரண்டி அளவு.

ஒரு பாத்திரததில் 5 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் சுக்கு, சித்தரத்தை,அதிமதுரம்,மிளகு ஆகியவற்றை தட்டிப்போட்டு,அதனுடன் ஆடாதொடை பொடி மற்றும் வேலிப்பருத்தி பொடி ஆகியவற்றை சேர்த்து அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து கால்பகுதி ஆகும் வரை வற்றவிட்டு வடிகட்டி அதில் 50 மில்லி அளவு எடுத்து அதனுடன் சிறிது வெல்லம் அல்லது தேன் சேர்த்து காலை மாலை இரு வேளைகள் தொடர்ந்து 2 நாட்கள் அருந்தினால் இருமல், சளி.ஆகியவை முற்றிலும் சரியாகும்.

வாழ்க வளமுடன்.

Dr. ரேவதி பெருமாள்சாமி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,