நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) நினைவு தினம். 🥲

 நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) நினைவு தினம்.


🥲
தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், உளவியலாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 'மனம்' என்கிற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின் எல்லைக்குள் கொண்டுவந்த பெருமை ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த மனநல மருத்துவரான இவரையே சாரும்.
உள்மனம் (unconscious mind) பற்றிய கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு நெறிமுறை, மனநல பாதிப்புகளைப் பாதிக்கப்பட்டவருடன் பேசியே குணப்படுத்தும் உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைமுறை போன்றவற்றை நிறுவியவர் அவர்.
பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து ஆற்றல் என அழுத்தமாகப் பதிவு செய்தவர் பிராய்ட்
செரிப்ரல் பால்ஸி, அபேஸியா போன்ற மூளை பாதிப்புகள் தொடர்பாக வியன்னா பொது மருத்துவமனையில் 1895-ல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தனியாக மருத்துவமனை தொடங்கி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.
சுயநினைவு இல்லாதது பற்றிய இவரது கோட்பாடுகள், மனம் தொடர்பான நுணுக்கங்கள், மனநோய்கள் குறித்த விளக்கங்கள், நோயாளி - மருத்துவர் உரையாடல் சிகிச்சை முறை ஆகியவை மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹிஸ்டீரியா குறித்து ஆராய்ந்தார். அதன் வெளிப்பாடுகள், ஆழ்மனத் தொடர்புகளைக் கண்டறிந்து அவற்றை வகைப்படுத்தினார்.
கனவுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். ‘உணர்வுகளைக் கனவுகள் மிகைப்படுத்திக் காட்டுகின்றன. கனவுகள் ஒழுங்கற்றவை. உள்மன ஆசைகளின் வெளிப்பாடே கனவு’ என்றார். தன் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சைகள் முறைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
உளவியல் என்பது மனம் குறித்த திட்டவட்டமான வரையறை அல்ல. அது தொடர்ந்து மாறுவது என்பார். அதை உயிரோட்டமுள்ள உளவியல் (Dynamic Psychology) என்ற பெயரில் முன்வைத் தார். இது அவரது முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி