டி20 உலக கோப்பையில் சாதனை படைத்த வீரர்கள் - ஒரு பார்வை...!*


டி20 உலக கோப்பையில் சாதனை படைத்த வீரர்கள் - ஒரு பார்வை...!*



இதுவரை நடந்து முடிந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் சில சாதனைகளின் விவரம்.



20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.


இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.


இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமிபியா, 'பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும்.


சூப்பர்12 சுற்றில் ஏற்கனவே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்1), இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (குரூப்2) அணிகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றுடன் முதல் சுற்றில் இருந்து வரும் 4 அணிகளும் இணையும். சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் தங்களுக்குள் ஒரு முறை மோத வேண்டும்.


இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். அந்த வகையில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 23-ந்தேதி மெல்போர்னில் எதிர்கொள்கிறது. முதல் சுற்றில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் கீலாங் ஸ்டேடியத்தில் நடக்கின்றன.


ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, கத்துக்குட்டி அணியான நமிபியாவை சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து- ஐக்கிய அரபு அமீரகம் (பிற்பகல் 1.30 மணி) மோதுகின்றன. இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் சில சாதனைகள் வருமாறு:-


அதிக ரன்கள் குவித்தவர்: மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை), 1,016 ரன்கள் (31 ஆட்டம்)


அதிக சிக்சர் விளாசியவர்: கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்) 63 (33 ஆட்டம்)


அதிக விக்கெட் வீழ்த்தியவர்: ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), 41 (31 ஆட்டம்)


சிறப்பான பந்து வீச்சு: அஜந்தா மென்டிஸ் (இலங்கை) 8 ரன் கொடுத்து 6 விக்கெட்டுகள் (ஜிம்பாப்வேக்கு எதிராக 2012)


அணியின் அதிகபட்சம்: இலங்கை 260/6 (கென்யாவுக்கு எதிராக 2007)


அணியின் குறைந்தபட்சம்: நெதர்லாந்து 39 (இலங்கைக்கு எதிராக 2014)


அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர்: தில்ஷன் (இலங்கை) -35 ஆட்டம்


அதிக ஆட்டங்களில் கேப்டன்: டோனி (இந்தியா)-33 ஆட்டம்


அதிக கேட்ச் செய்த பீல்டர்: டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) 23 கேட்ச் (30 ஆட்டம்)

[16/10, 10:14 am] +91 99407 62319: *20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்*



16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது.

கீலாங்,


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.


இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.


இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமிபியா, 'பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும்.


சூப்பர்12 சுற்றில் ஏற்கனவே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் (குரூப்1), இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (குரூப்2) அணிகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றுடன் முதல் சுற்றில் இருந்து வரும் 4 அணிகளும் இணையும். சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள அணிகள் தங்களுக்குள் ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். அந்த வகையில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 23-ந்தேதி மெல்போர்னில் எதிர்கொள்கிறது.


இரண்டு ஆட்டங்கள்


முதல் சுற்றில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் கீலாங் ஸ்டேடியத்தில் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, கத்துக்குட்டி அணியான நமிபியாவை (இந்திய நேரப்படி காலை 9.30 மணி) சந்திக்கிறது. தரவரிசையில் பின்தங்கியதால் நேரடியாக சூப்பர்12 சுற்றில் கால்பதிக்கும் வாய்ப்பை இழந்து விட்ட இலங்கைக்கு முதல் சுற்றில் பெரிய அளவில் சவால் இருக்காது. அண்மையில் ஆசிய கோப்பையை வென்ற இலங்கை இன்றைய ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே 2021-ம் ஆண்டு உலக கோப்பையில் சந்தித்த ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.


மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து- ஐக்கிய அரபு அமீரகம் (பிற்பகல் 1.30 மணி) மோதுகின்றன. இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி தலா 4-ல் வெற்றி கண்டுள்ளன. ''கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இலங்கை, நமிபியா சூப்பர்12 சுற்றில் ஆடியதால் எங்கள் பிரிவில் எல்லா நெருக்கடியும் அவர்களுக்கு தான். கடந்த ஆண்டை விட இந்த முறை சிறப்பாக தயாராகி இருக்கிறோம் ''என்று நெதர்லாந்து வீரர் காலின் அகெர்மான் குறிப்பிட்டார்.


இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன


புதிய விதிமுறைகள்


இந்த உலக கோப்பை போட்டியில் ஐ.சி.சி. மாற்றி அமைத்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது. பேட்ஸ்மேன் கேட்ச் ஆகும் போது, அதற்குள் எதிர்முனையில் உள்ள வீரர் பேட்டிங் முனைக்கு ஓடிவந்து விட்டால் அவர் தான் அடுத்த பந்தை முன்பு எதிர்கொள்வார். இனி அப்படி கிடையாது. புதிதாக களம் இறங்கும் வீரர் தான் அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். அதே சமயம் அந்த வீரர் ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் ஆனால் இந்த விதிமுறை பொருந்தாது.


குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காவிட்டால் தாமதிக்கும் நேரத்தை கணக்கில் கொண்டு ஆட்டத்தின் கடைசி பகுதியில் பீல்டிங் அணி எல்லைக்கோடு அருகே நிறுத்தப்படும் ஒரு பீல்டரை உள்வட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும். இது எதிரணி பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் விரட்ட உதவிகரமாக இருக்கும். உதாரணமாக 19-வது ஓவருக்குள் இன்னிங்ஸ் நேரம் முடிந்து விட்டதால் எஞ்சிய ஒரு ஓவரில் பீல்டிங் அணி இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்.


பவுலர் முனையில் உள்ள பேட்ஸ்மேன் பந்துவீசுவதற்கு முன்பே கிரீசை விட்டு சில அடி வெளியேறும் போது பவுலர் ரன்-அவுட் செய்தால் கடுமையான விமர்சனங்கள் கிளம்பும். 'மன்கட்' என்று அழைக்கப்படும் இந்த ரன்-அவுட் சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் அதிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு ரன்-அவுட் செய்வது முன்பு 'நேர்மையற்ற ஆட்டம்' என்ற பிரிவில் இடம் பெற்றிருந்தது. அது தற்போது ரன்-அவுட் என்ற விதிமுறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. எனவே இத்தகைய முறையில் ரன்-அவுட் செய்யும் போது அது அதிகாரபூர்வமாக ரன்-அவுட்டாக எடுத்துக் கொள்ளப்படும்.


இது போன்ற புதிய விதிமுறைகள் இந்த உலக கோப்பை திருவிழாவில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.


உலக கோப்பையில் கலக்கியவர்கள்


இதுவரை நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சில சாதனைகள் வருமாறு:-


அதிக ரன்கள் குவித்தவர்: மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை), 1,016 ரன்கள் (31 ஆட்டம்)


அதிக சிக்சர் விளாசியவர்: கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்) 63 (33 ஆட்டம்)


அதிக விக்கெட் வீழ்த்தியவர்: ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), 41 (31 ஆட்டம்)


சிறப்பான பந்து வீச்சு: அஜந்தா மென்டிஸ் (இலங்கை) 8 ரன் கொடுத்து 6 விக்கெட்டுகள் (ஜிம்பாப்வேக்கு எதிராக 2012)


அணியின் அதிகபட்சம்: இலங்கை 260/6 (கென்யாவுக்கு எதிராக 2007)


அணியின் குறைந்தபட்சம்: நெதர்லாந்து 39 (இலங்கைக்கு எதிராக 2014)


அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர்: தில்ஷன் (இலங்கை) -35 ஆட்டம்


அதிக ஆட்டங்களில் கேப்டன்: டோனி (இந்தியா)-33 ஆட்டம்


அதிக கேட்ச் செய்த பீல்டர்: டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) 23 கேட்ச் (30 ஆட்டம்)

 *T20 World Cup Winners:இதுவரை டி20 உலகக் கோப்பை வென்ற அணிகள்*


டி20 உலகக் கோப்பை தொடர் இதுவரை 7 முறை நடைபெற்றுள்ளது. இதில் 6 அணிகள் கோப்பையை வென்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை எட்டாவது தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது


(1 / 7)


2007ஆம் ஆண்டில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது. இந்த முதல் தொடரில் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்று சாதனை புரிந்தது. தோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியாக அமைந்திருந்த இந்தியா இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் பிறகு 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்தியா அணி இலங்கையிடம் தோல்வியை தழுவியது(Twitter)


(2 / 7)


இரண்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான இறுதியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பாகிஸ்தான் அணிக்கு யுனஸ்கான் கேப்டனாக செயல்பட்டார்


(3 / 7)


வழக்கமாக இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 2011ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதாக இருந்ததால் ஓர் ஆண்டு முன்னதாக 2010இல் மூன்றாவது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரில் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்ததாக கூறப்படும் இங்கிலாந்து அணி பெற்ற முதல் ஐசிசி கோப்பையை அமைந்தது


(4/7)


நான்காவது டி20 உலகக் கோப்பை தொடர் 2012இல் இலங்கையில் நடைபெற்றது. 50 ஓவர் உலகக் கோப்பையில் முதல் இரண்டு தொடர்களை வென்று ஜாம்பவான் அணியாக வலம் வந்த வெஸ்ட்இண்டீஸ் அதன் பின்னர் ஐசிசி தொடர்களில் பெரிய அளவில் ஜொலிக்காமலேயே இருந்து வந்தது. இதையடுத்து இந்த தொடரில் போட்டியை நடத்திய இலங்கைக்கு எதிராக இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. முதல் முறையாக ஆசிய மண்ணில் நடைபெற்ற இந்த தொடரில் ஆசிய நாடுகள் அல்லாத அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது


(5 / 7)


ஐந்தாவது டி20 உலகக் கோப்பை தொடர் இரண்டாவது முறையாக ஆசிய மண்ணில் நடைபெற்றது. 2014ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றிக்கு முன்னர் 2007ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர், 2009 மற்றும் 2012 டி20 தொடர், 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் என நான்கு முறை இறுதிப்போட்டியில் விளையாடி தோல்வியுற்ற பின்னர் ஐந்தாவது முறையாக கோப்பைக்கு முத்தமிட்டது. அதேபோல் இந்தியா அணி 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் 7 ஆண்டுகள் கழித்து இறுதிப்போட்டியில் விளையாடி தோல்வியை தழுவியது


(6 / 7)


மூன்றாவது முறையாக ஆசிய மண்ணில் 2016ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடரில் இறுதிப்போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. அதுவரை உலகக் கோப்பை வெல்லாத ஒரு அணி இறுதிப்போட்டியில் விளையாடி வந்த நிலையில், முதல் முறையாக சாம்பியன் படத்தை ஒரு முறை வென்ற இருஅணிகள் மோதின. எனவே இரண்டாவது முறையாக யார் சாம்பியன் ஆகப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் நடைபெற்ற இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது


(7 / 7)


2016ஆம் ஆண்டுக்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக் கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டது. இந்த தொடரில் அதுவரை டி20 கோப்பை வென்றிடாத ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. 50 ஓவர் உலகக் கோப்பையை ஐந்து முறை வென்ற ஆஸ்திரேலியா, முதல் முறையாக டி20 உலகக் கோப்பையையும் வென்று சாதனை புரிந்தது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,