*வங்கிகளுக்கு வாரம் 5 நாள் வேலை? - வங்கிகள் சங்கம் முதற்கட்ட ஒப்புதல்*


*வங்கிகளுக்கு வாரம் 5 நாள் வேலை? - வங்கிகள் சங்கம் முதற்கட்ட ஒப்புதல்*


வங்கிகளின் வேலை நாட்களை வாரத்துக்கு 5 நாட்களாகக் குறைக்க, இந்திய வங்கிகள் சங்கம் முதற்கட்ட ஒப்புதலை வழங்கிஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்கிகளுக்கு முன்பு, வாரம்தோறும் சனிக்கிழமைகளில் அரைநாளும், ஞாயிற்றுக்கிழமை முழுநாளும் விடுமுறை விடப்பட்டுவந்தது. இந்நிலையில், அரசு ஊழியர்களைப்போல தங்களுக்கும் வாரம்தோறும் வேலை நாட்களை5 நாட்களாக குறைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக, பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.


இந்நிலையில், தங்களுக்கு வார வேலை நாட்களை 5 நாட்களாகக் குறைத்து, சனி, ஞாயிறு விடுமுறை விடவேண்டும் என வங்கி ஊழியர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் உள்ளிட்ட 4 சங்கங்கள் இந்திய வங்கிகள் சங்கத்திடம் கடிதம் வழங்கியுள்ளது. இதற்கு இந்திய வங்கிகள் சங்கம் முதற்கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது

 *

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு