படைப்பு சங்கமம் 2022 விழா/இலக்கியச் சுடர் விருது
நேற்று மாலை படைப்பு சங்கமம் 2022 விழாவில்
சிறந்த நூல்களுக்கான பரிசுகள், இளம் எழுத்தாளரகளுக்கான ஊக்கப் பரிசுகள் இவற்றோடு இவ்வாண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும், படைப்புச் சுடர் விருது கவிஞர் இந்திரன் அவர்களுக்கும் இலக்கியச் சுடர் விருது கவிஞர் பிருந்தா சாரதி அவர்களுக்கும்
வழங்கப்பட்டன. மிகச் சிறப்பான விழாவை நடத்திக் காட்டினர் படைப்புக் குழுவினர்.
40 நூல்கள் வெளியீடும் நடந்தது. ஒவ்வொரு நூலுக்கும் காணொளி, சிறப்பு பரிசு பெற்றவர்கள் குறித்த காணொளி என அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது விழா. நேரக் கட்டுப்பாட்டை மிகவும் நேர்த்தியாக கடைபிடித்து குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தனர்.
இது குறித்து பிருந்தா சாரதி அவர்கள்
வாழ்வைப் படைப்பாக்கும் தமிழின் சிறந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் கரங்களால் இவ்விருதினைப் பெற்றதில் பெருமை கொள்கிறேன். இச்சுடர் என் பாதையை மேலும் அழகாக்குகிறது. வெளிச்சமாக்குகிறது.
இலக்கியச் சுடரை எனக்குள் ஏற்றிய முன்னோடிகள் அனைவரையும் போற்றி வணங்குகிறேன்.
விருது வழங்கிய ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ஜின்னா ஆஸ்மி அவர்களுக்கும் குழுவினர்க்கும் என் இதயம் கனிந்த நன்றி.
என தெரிவித்தார்
*
பிருந்தா சாரதி
*
Comments