*2022-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரணம் அக்டோபர் 25 கடும் அவஸ்தைகளை சந்திக்க போகும் ராசிகள் யார் தெரியுமா?*
*
2022-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரணம் அக்டோபர் 25 கடும் அவஸ்தைகளை சந்திக்க போகும் ராசிகள் யார் தெரியுமா?*
*2022-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரணம் அன்று செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்கள்*
*சூரிய கிரகணம் 2022*
*இந்த 2022-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரணம் வரும் 25.10.2022 அன்று நிகழ உள்ளது. ஆக இன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்கள் என்ன?, இந்த சூரிய கிரகத்தினால் கடும் அவஸ்தைகளை சந்திக்க இருக்கும் ராசிக்காரர்கள் யார்?, சூரிய கிரகணம் நிகழும் சரியான நேரம் எப்பொழுது போன்ற தகவல்களை இன்று நாம் படித்தறியலாம் வாங்க*
2022-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் சுபகிருது வருடம், ஐப்பசி மாதம் 08-ம் தேதி அதாவது 2022 அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி செவ்வாக்கிழமை மதியம் 2 மணி 28 நிமிடங்கள் முதல் மாலை 6 மணி 32 நிமிடங்கள் வரை துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் கேது கிரகஸ்த சூரிய கிரகணம் நிகழ் உள்ளது.
*சூரிய கிரகணம் அன்று செய்யக்கூடாத விஷயங்கள்:*
சூரிய கிரகணம் நிகழும் போது கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்று நமது முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அப்படி வெளியே சென்றால் அந்த கரிப்பினி பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும்.
ஏன் கர்ப்பிணி பெண்கள் சூரிய கிரகணம் அன்று வெளியே செல்ல கூடாது என்றால் சூரிய கிரகணம் அன்று சூரியனில் இருந்து வரக்கூடிய கதிர்விசைகளின் தாக்கமானது அதிகமாக இருக்குமாம் ஆக அன்றைய நாள் கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்வது முற்றிலும் தவிர்க்கவும்.
மேலும் கிரகண நேரங்களை வீட்டில் சமையல் செய்ய கூடாது. இல்லறவுறவு கொள்ளக்கூடாது. நகத்தை வெட்டக்கூடாது, தண்ணீர் அருந்தக்கூடாது, இந்த நேரத்தில் எந்த வேலைகளையும் செய்ய கூடாது.
இந்த கிரகண நேரத்தில் எந்த ஒரு உணவையும் சாப்பிட கூடாது, அதிலும் கண்டிப்பாக அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
செய்ய வேண்டிய விஷயங்கள்:
கிரகண நேரம் ஆரம்பிப்பதற்கு முன் நாம் உணவருந்தக்கூடிய அனைத்து பொருட்களிலும் தர்ப்பை புல்லை சிறிதளவு போட்டுவையுங்கள்.
கர்ப்பிணி பெண்கள் படுக்கும் போது தலையணைக்கு கீழ் தர்ப்பை புல்லை வைத்துக்கொண்டு உறங்குங்கள்.
இந்த கிரகண முடியும் போது நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்த விஷயமாகும்.
இந்த கிரகண நேரத்தில் நாம் நமக்கு தெரிந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது அது நமக்கு பலவகையான நன்மைகளை வழங்கும். ஆக வீட்டில் உள்ள அனைவரும் உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை உச்சரிக்கலாம்.
மந்திரம் தெரியாது என்றால் ஒன்று பிரச்சனை இல்லை தியானம் செய்யலாம். அதும் உங்களுக்கு நல்ல பலன்களை வழங்கும்.
கிரகண நேரங்களில் வீட்டில் ஹோமம் வளர்ப்பதன் மூலம் அது உங்கள் வீட்டிற்கு 100 மடங்கு புண்ணியங்களை கொண்டு வந்து சேர்க்கும்.
கிரகணம் முடிந்தபிறகு வீட்டை சுத்தம் செய்து, நீங்களும் குளித்துவிட்டு, வீட்டில் விளக்கேற்றிவிட்டு உங்கள் வீட்டின் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வரலாம்.
இந்த நேரத்தில் அரிசி, நல்லெண்ணெய் போன்றவற்றை தனமாக கொடுப்பது சிறந்த பலன்களை நமக்கு வழங்கும்.
எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்?
இந்த கிரகணம் துலாம் ராசியில் நிகழ்வதால் சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், திருவாதிரை போன்ற கிரகண தோஷமுள்ள நட்சத்திரக்காரர்கள் பரிகாரம்அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
இந்த நட்சத்திரக்காரர்கள் கிரகணம் முடிந்தவுடன் குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று உங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை செய்து வரவும்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்:
இந்த சூரிய கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்றால் மிதுனம், துலாம், மற்றும் மகரம் இந்த மூன்று ராசிக்காரர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசியில் பிறந்தவர்கள் இந்த நேரத்தில் எந்த ஒரு முக்கியமான விஷயங்களை பேசவோ, செய்யவோ வேண்டாம், அதேபோல் இந்த நேரத்தில் எந்த ஒரு விஷயத்திற்க்கவும் முதலடி செய்ய வேண்டாம், அதேபோல் சண்டை சச்சரசு இல்லாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் நல்லது
*தற்போது ராகுவின் சாரம் பரணி 2ம் பாதத்திலும் கேதுவின் சாரம் ஸ்வாதி 4ம் பாதத்திலும் நிற்க - அக்டோபர் 25ம் தேதி அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணைந்து ஸ்வாதி நக்ஷத்திரத்தில் சந்திக்கும் போது கிரகணம் ஏற்படுகிறது.
விதிகள்:
இந்த விதிகளானது எந்த காலத்திலும் பின்பற்ற வேண்டியவை:
1. வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது.
2. அதற்கென இருக்கக்கூடிய கண்ணாடிகளைக் கொண்டு பார்க்கலாம்.
3. கர்ப்பிணிகள் கிரகண சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது.
4. கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது.
5. முடிந்தவரை குலதெய்வத்தையும் - முன்னோர்களையும் - இஷ்ட தெய்வத்தையும் வணங்குதல் நலம்
6. 1 வயதிற்கு குறைவான குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது.
7. கிரகணம் முடிந்தவுடன் வீட்டினை கோமியம் - மஞ்சள் பொடி கலந்த நீரினால் சுத்தம் செய்வது நன்மை தரும்.
8. கிரகணத்திற்கு பிறகு எந்தெந்த நக்ஷத்ரகாரர்களுக்கு பிடித்திருக்கிறதோ அவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.
9. கிரகணம் நடக்கும் போது உணவு பொருட்களில் தர்ப்பை புல் போட்டு வைத்திருப்பது நலம் பயக்கும்.
10.கிரகணம் ஆரம்பிக்கும் போது தர்ப்பணம் செய்ய வேண்டும்.
கிரகண தோஷங்கள்:
1. ஜெனன கால ஜாதகத்தில் ராகு கேது இருக்கும் அதே ராசிகளில் கிரகண தோஷம் ஏற்பட்டால் தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது ராகு மேஷ ராசியிலும் கேது துலா ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். யாருக்கெல்லாம் பிறக்கும் போது ஜெனன கால ஜாதகத்தில் மேஷம் அல்லது துலாத்தில் ராகுவோ கேதுவோ இருந்தால் கிரகண தோஷம் ஏற்படும்.
2. கிரகணம் ஏற்படும் மாதங்களில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது கிரகணம் ஏற்படுவது ஐப்பசி மாதத்தில். எனவே யாரெல்லாம் ஐப்பசி மாதத்தில் பிறந்திருக்கிறார்களோ அவர்களுக்கு தோஷம் ஏற்படும்.
3. கிரகணம் ஏற்படும் ராசிகளில் பிறந்தவர்களுக்கு தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது கிரகணம் ஏற்படுவது ஸ்வாதி நக்ஷத்திரத்தில். எனவே துலா ராசியில் பிறந்தவர்களுக்கு தோஷம் ஏற்படும்.
4. இதைத் தவிர கிரகணம் ஏற்படும் நக்ஷத்ரத்திங்களில் பிறந்தவர்களுக்கும் அந்த நக்ஷத்திரத்தின் ஜென்மாதி ஜென்ம மற்றும் அனுஜென்ம நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். உதாரணமாக அக்டோபர் 25ம் தேதி நிகழக்கூடிய பகுதி சூரிய கிரகணமானது ஸ்வாதி 4ம் பாதத்திலும் பரணி 2ம் பாதத்திலும் நிகழ்கிறது. எனவே பரணி - பூரம் - பூராடம் மற்றும் திருவாதிரை - ஸ்வாதி - சதயம் ஆகிய நக்ஷத்ரகாரர்களுக்கும் தோஷம் ஏற்படும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
சூரியனுடைய மந்திரமான ஆதித்யஹ்ருதயம் மற்றும் சிவனுடைய தோத்திரங்கள் - சிவபுராணம் - ருத்ரம் ஆகியவை சொல்லலாம். முடியாதவர்கள் ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லலாம். மேலும் அபிராமி அந்தாதியும் சொல்லலாம்.
Comments