ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப் போட்டி(2022)க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியல்

 



ஐ.எஸ்.ஆர் 5 நிமிட குறும்படப் போட்டி(2022)க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் பட்டிலை ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ”குழந்தைகள் உரிமை” என்பதை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட இந்தப் போட்டி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் இப்போட்டி நடந்துதுள்ளது. 


முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இதர போட்டியாளர்கள் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்த இந்தப் போட்டிக்கு தோழமை அமைப்பு ஆதரவு கொடுத்திருக்கிறது. போட்டியாளர்கள் குழந்தைகள் உரிமைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக, தோழமை அமைப்பின் தேவநேயன் குழந்தைகள் உரிமைகள் பற்றிய காணொளி ஒன்றை தயாரித்து அனுப்பினார். 


ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பிலும் குழந்தைகள் உரிமைகள் பற்றி தொடர்ச்சியாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்குப் பின் பதிவு செய்த போட்டியாளர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு 11 குறும்படங்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இப்படங்களை தயாரித்தவர்கள் விருப்பப்பட்டால் மூவிவுட் ஓடிடியில் வெளியிட அதன் தலைமை நிர்வாகி திரு.கேபிள் சங்கர் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதன் மூலம் போட்டியாளர்களின் படங்களுக்கு தரமான சினிமா ஆர்முள்ள இரசிகர்கள் கிடைப்பார்கள், என்கிறார் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்.


இன்னும் சில தினங்களில் இந்த பட்டியலில உள்ள படங்களில்  சிறந்த 3 படங்கள் மற்றும் மற்ற விருதுகளுக்கான பெயர்களும் தேர்ந்தெடுக்கப்படும் என்று ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. போட்டி பற்றிய தொடர் செய்திகளுக்கு நமது பீப்பிள் டுடே வலைப்பதிவை தொடர்ந்து வாசியுங்கள்.



போட்டிக்கு தேர்வாகியுள்ள 11 படங்கள் மற்றும் இயக்குநர்களின் பட்டியல்

வா - மலையலப்பட்டி செந்தில்குமார்

கண்ணாடி - ஆர். பிரபு

நெகிழி பூக்கள் - ஐ. தமிழ் பெருமான்

புதுமைப் பூக்கள் - ஜி. பழனிவேல் ராஜன்

ஸ்கூலுக்குப் போலாமா - எம். சந்திரசேகர்

செவக்காட்டுச் சிற்பங்கள் - என். கண்ணதாசன்

தி பாய்ஸ் - எம். சங்கர சுப்ரமணியம்

வாத்சல்யம் - எஸ். பன்னீர் செல்வம்

மாற்றம் - யுடிஎஸ் ரமேஷ்

யு ஆர் ஸ்பெஷல் - ரீனா கவுர் தில்லான்

குழந்தைகள் உரிமைகள் ஆவணப்படம் - ஆர்.வி.ஸ்ரீமன்

Comments

ISR Selvakumar said…
ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் மற்றும் போட்டியில் பங்கேற்ற படைப்பாளிகள் சார்பாக நன்றி!

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,