ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பில் நடத்தி வரும் 5 நிமிடக் குறும்படப்போட்டி2022/தேர்வுக்குழு உறுப்பினர்கள்


 ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பில்  நடத்தி வரும் 5 நிமிடக் குறும்படப்போட்டியின் தேர்வுக்குழு உறுப்பினர்கள் பற்றி சிறு அறிமுகம்.


இந்த 5 நிமிடக் குறும்படப் போட்டியின் மையக் கரு குழந்தைகள் உரிமை (Child Rights).


எனவே போட்டிக்கு வந்துள்ள படங்களில் ”குழந்தைகள் உரிமை” என்ற மையக்கரு சரியாக சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை ஜென்சி உறுதி செய்துள்ளார். இவர் CCRD எனப்படும் குழந்தைகள் உரிமை மற்றும் முன்னேற்றத்திற்கான அமைப்பின் இயக்குநராக இருக்கிறார்.


சரியாக திரைவடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை இயக்குநர் ராசி. அழகப்பன் கவனித்து மதிப்பெண்கள் கொடுத்துள்ளார். 2019ல் வெளியான வண்ணத்துப்பூச்சி என்ற அவருடைய திரைப்படம், தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது.


அனைத்துப் படங்களும் பொது வெளியில் திரையிடக் கூடிய அளவுக்கு வரம்புக்குள் உள்ளதா என்பதை வரையறுத்து மதிப்பீடு செய்துள்ளார் அர்ஷா மனோகரன். எழுத்தாளர், விமர்சகர் என்ற இலக்கிய அடையாளம் உள்ள இவர், திரைப்படத் தணிக்கைக் குழுவில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.


இந்த மூவருமே தங்கள் பார்வையில் படம் எப்படி இருக்கிறது என்பதையும் வரிசைப்படுத்தி மதிப்பெண் வழங்கியிருக்கிறார்கள்.


இவர்கள் வழங்கியுள்ள சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் சிறந்த 3 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே போல சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு, சிறந்த எடிட்டிங் உள்ளிட்ட விருதுகளும் இறுதி செய்யப்பட்டுவிட்டன.


விரைவில் ஒரு திரை பிரபலம் விருதுகள் பட்டியலை  அறிவிப்பார். 


அதே நாளில் விருது விழா எங்கே, என்று நடைபெறும் என்பது உள்ளிட்ட தகவல்களும் அறிவிக்கப்படும்.


தேர்வுக் குழுவினருக்கும் போட்டியை நடத்த உறுதுணையாக உள்ள அனைவருக்கும் நன்றி!


Supported by 

Tamil Nadu Open University (Department of Journalism and media science)

Stella Maris College (Department of Social Work)

Thozhamai - NGO Partner

Movie Wood (OTT Streaming Partner)

People Today (Blog Partner)

My Sixer (Online News Partner)

India Excite (Technology Partner)

My Sixer (Online News Partner)

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,