இந்த 5 பொருட்களை மறந்தும் கூட தானம் செய்யக் கூடாது.

 


இந்த 5 பொருட்களை மறந்தும் கூட தானம் செய்யக் கூடாது..மீறினால் தீராத வறுமை, தரித்திரம் வந்து சேருமாம்..!*


தானம் செய்வது நல்லது என்று சொல்லப்படுகிறது. ஆனால், சில விஷயங்களை தானம் செய்வது தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவை எந்தெந்த பொருட்கள் என்பதை இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கலாம். 

 தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்றெல்லாம் கூறுவது உண்டு. உண்மையிலேயே தானம் செய்ய நினைப்பவர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் எல்லாம் உள்ளது. வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்க, பிரச்சனைகள் விலகி வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்க தானம் செய்வது நல்லது என்று சொல்லப்படுகிறது.ஒவ்வொரு தானம் நாம் செய்யும் பொழுதும் ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. தானங்கள் செய்வது ஒருவரின் பாவங்கள் அனைத்தையும் நீங்கி புண்ணியத்தை கொடுக்கும் என்பது ஐதீகம். அப்படி நாம் செய்யும் தானங்களில் ஏழைகளுக்கு கொடுக்கும் தனமானது உயரியது என்கிறது சாஸ்திரம். ஆனால், சில விஷயங்களை தானம் செய்வது தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவற்றை தவிர்த்து மற்ற பொருட்களை நாம் தானம் செய்து கொள்ளலாம். அவை எந்தெந்த பொருட்கள் என்பதை இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கலாம். 


கெட்டுப்போன உணவுகள்: தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்லி கேட்டிருப்போம். ஏழைகளின் பசி தீர்க்க கொடுக்கும் தானம் நமக்கு புண்ணியத்தை கொண்டு வந்து சேர்க்கும். ஆனால், நாம் அப்படி வழங்கும் உணவு பழையதாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீணான உணவை தானம் செய்தால், குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும்.  வீட்டில் தரித்திரம் கொண்டு வந்து சேர்க்கும். 


கத்தரிக்கோல்:

 

கத்தரிக்கோல், கத்தி போன்ற வேறு எந்த கூர்மையான பொருளையும் ஒருபோதும் யாரிடமும் தானமாக செய்யக்கூடாது. இவற்றை தானம் செய்வதன் மூலம், அதிர்ஷ்டம் உங்களை விட்டு விலகி ஓடும். அதே நேரத்தில், குடும்பத்தில் இன்னல்களும், பிரச்சனைகளும் அதிகரிக்கும். புத்தகங்கள் கொடுக்கும் போது:


நீங்களும் யாருக்காவது புத்தகங்கள் அல்லது நூல்களை நன்கொடையாக கொடுத்தும் போது, கிழிந்த புத்தகங்களையோ, நூல்களையோகொடுக்க வேண்டாம். இப்படிச் செய்வதால், உங்கள் குழந்தைகளின் கல்வியில் தடை ஏற்படும். அத்துடன் குழந்தைகளின் மகிழ்ச்சியை குழைத்து போடும். எனவே. அதற்கு பதிலாக நீங்கள் எப்போதும் அவர்களுக்கு புதியவற்றைக் கொடுங்கள்.கெட்டுப்போன எண்ணெய்:


வீட்டில் பயன்படுத்திய அல்லது கெட்டுப்போன எண்ணெயை தானம் செய்வது அசுபமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதால், சனி தேவரின் கோபம் உங்கள் மீது வரும். அப்படி, வரும் சனீஸ்வரரின் கோபப்பார்வை, உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும்.  துடைப்பத்தை தானம் செய்ய வேண்டாம்:


வீட்டினை சுத்தம் செய்யும் துடைப்பம் லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனால் மறந்தும் கூட வீட்டை சுத்தப்படுத்தும் துடைப்பத்தை தானம் செய்யக்கூடாது. வீட்டில் உள்ள துடைப்பத்தை தானம் செய்பவர்கள் வறுமையை ஏற்படும். அத்துடன் பலவிதமான நோய்களும் அவர்களை சூழ்ந்து கொள்ளும் என்பது நம்பிக்கையாகும்.

Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,