: *எண்ணிய காரணங்கள் நிறைவேற சாய்பாபா வழிபாடு..!!*
: *
எண்ணிய காரணங்கள் நிறைவேற சாய்பாபா வழிபாடு..!!*
தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற சாய்பாபாவை வேண்டி கொண்டு வரும் ஒன்பது வியாழக்கிழமை வழிபாடு நடத்தினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
சீரடி சாய்பாபா, பல கோடி மக்களின் மனதில் தெய்வமாக மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல இடம் பிடித்துள்ளார். அவரை முழுமையாக, உறுதியாக நம்பியவர்களுக்கு நினைத்தது நடக்கிறது. இதனால் தான் ஊர் தோறும் சீரடி சாய்பாபாவின் ஆலயங்கள் உலகமே வியக்கும் வண்ணம் உருவாகி வருகின்றன.
இந்த பிறவியில் சீரடி சாய்பாபா பற்றி அறிந்து உணர்ந்து, அவரது மகிமையை புரிந்து கொண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.
வழிபாட்டை எந்த ஒரு வியாழக்கிழமை ஆனாலும் அன்றில் இருந்தே ஆரம்பிக்கலாம். விரதத்தை ஆரம்பிக்க முன்னர் சாயி நாமத்தை மனதார வேண்டிக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். விரததத்தை ஆண், பெண், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணிக்கொண்டு சாதித்துக் கொள்ள வேண்டும்....
ஆன்மிகம்ஷீர்டி சாய் பாபாவை இப்படி வழிபட்டால் நிச்சயமான பலன் உண்டு!*
ஷீர்டியில் பல ஆண்டுகள் தங்கியிருந்து பாலை நிலம் போன்று இருந்த அந்த பூமியை தனது தவசக்தியால் சோலைவனம் ஆக்கியதுடன், அங்கு வாழ்ந்து வந்த மக்கள் அனைவருக்கும் இறுதி வரை தனது நல்லாசிகளை வழங்கினார். அவரது தெய்வீக ஆற்றலும், ஞானமும் பாரதம் முழுவதும் இருந்த மக்களை ஷீர்டி எனும் சின்னஞ்சிறிய கிராமத்திற்கு வரவழைத்தது. தனக்கருகில் இருக்கும் பக்தர்களுக்கு நேரிலும், எட்டமுடியாத தொலைவில் இருக்கும் தனது பக்தர்களுக்கு தனது சித்தாற்றலால் பல நன்மைகளை செய்துள்ளார் சாய் பாபா.
அப்படிப்பட்ட சாய்பாபாவை வணங்கும் போது என்ன நைவேத்தியம் செய்தால் என்னென்ன பலன்களை பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். ஷீரடியில் வாழ்ந்த மகானான சாய்பாபா ஒருபோதும் தன்னை ஞானி என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறியதில்லை. அவரின் ஒரே சொத்து பக்தர்கள் அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல் அவர் காட்டிய அன்பு மட்டும் தான். அத்தகைய பக்தர்கள் சாய்பாபாவிற்கு பல வகையான உணவு பொருட்களை அன்புடன் அளிக்கும் போது, அவற்றை ஆசீர்வதித்து குழந்தைகளுக்கும், அங்குள்ள மற்றவர்களுக்கும் கொடுக்கும் வழக்கம் கொண்டவராக ஸ்ரீ சீரடி சாய்பாபா இருந்தார்.
அவர் சித்தியடைந்து ஒரு நூற்றாண்டு முடிந்தாலும் இன்றும் வணங்குபவர்களின் வாழ்வில் ஏற்படும் எத்தகைய சிக்கல்களையும் தீர்க்கும் ஆற்றல் படைத்தவராக சாய்பாபா விளங்குகிறார். அவருக்கு எத்தகைய நைவேத்தியம் படைத்து வணங்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். சீரடி சாய்பாபா வாழ்ந்த காலத்தில் அவருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவுப் பொருளாக பசலைக்கீரை இருந்தது. எனவே இன்றும் சாய்பாபாவை வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்பவர்கள் பசலைக்கீரையை பாபாவுக்கு நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
இதன்மூலம் சாய்பாபாவை வழிபடுபவர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும். சீரடி சாயி பாபாவிற்கு மிகவும் பிடித்த மற்றொரு உணவு அல்வா ஆகும். வியாழக்கிழமைகளில் சாய்பாபாவிற்கு ரவை கொண்டு செய்யப்பட்ட அல்வாவை படைத்து வழிபடுவதால் வாழ்வில் வளமையும், மகிழ்ச்சியும் பெருகும். சாய்பாபா ஒரு துறவி ஆவார். எனவே அவர் அதிகம் சாப்பிட்ட எளிய உணவாக இருந்தது கஞ்சி மற்றும் கூழ் மட்டும் தான்.
வியாழக்கிழமைகளில் கஞ்சி மற்றும் கூழ் ஆகியவற்றை தயாரித்து சாய்பாபாவிற்கு நைவேத்தியம் செய்து வணங்கி, பக்தர்களுக்கு கஞ்சி, கூழ் ஆகியவற்றை பிரசாதமாகக் தருவதால் உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற கஷ்டங்கள், வறுமை நிலை ஆகியவை விரைவில் தீரும். நமது கலாச்சாரத்தில் அனைத்து தெய்வீக வழிபாடுகளிலும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. எனவே தேங்காயை வியாழக்கிழமைகளில் சாய்பாபாவிற்கு படைத்து வழிபாடு செய்வதால் நம் வாழ்வில் ஏற்படுகின்ற தடைகள், தாமதங்கள் அனைத்தும் நீங்க வழிவகை செய்யும்.
சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்தமான பழ வகை ஆரஞ்சு பழம். வியாழக்கிழமைகளில் வீட்டிலோ அல்லது சாய்பாபா கோயிலிலோ பாபாவை வழிபாடு செய்யும் போது, ஆரஞ்சு பழங்களை படைத்து வழிபாடு செய்வதால் தரித்திரங்கள், துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும். மேலும் பாபாவிற்கு மிகவும் விருப்பமான சாமந்தி மலர்களை சமர்ப்பித்து, சாய்பாபாவை வழிபடுவதால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேற பாபா அருள் புரிவார்.
Comments