*வறுமை நீங்கி குறைவில்லா அன்னத்தை பெற அன்னபூரணியை வழிபாட்டால்..!!


*வறுமை நீங்கி குறைவில்லா அன்னத்தை பெற அன்னபூரணியை வழிபாட்டால்..!!*


அன்னம் எனும் உணவு ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க தங்கு, தடையில்லாமல் கிடைக்க அருள் புரியும் தெய்வம் ஸ்ரீ அன்னபூரணி தேவி. அந்த அன்னபூரணி தேவியை விரதம் இருந்து பூஜை செய்து வழிபட்டு வந்தால் வறுமை நீங்கும் என்பது நம்பிக்கை. அன்னத்தை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்கிறாள் அன்னபூரணி. அதுமட்டுமல்லாமல் வீட்டில் அன்னபூரணியின் படம் இருப்பது வறுமையை நீக்கும்.


சிறிய அளவிலான அன்னபூரணி விக்ரகங்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். நம் வீட்டில் உள்ள அன்னத்தை, இல்லாதவர்களுக்கு தானமாகக் கொடுக்கும் போது தான் நம் வீட்டில் அன்னபூரணி நிரந்தரமாக தங்குவாள் என்பது நிச்சயமான உண்மை. ஒரு சிலரது வீட்டில் அன்னபூரணியை வைத்து வழிபட்டாலும் அவர்களது வீட்டில் உள்ள கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு என்ன காரணம். நாம் உணவினை சமைக்கும் போது இருக்கும் ஆர்வம், அதனை உண்பவர்களுக்கு பரிமாறும் போதும் இருக்க வேண்டும்.


நாம் மற்றவர்களுக்கு உணவினை பரிமாறும்போது மன சந்தோஷத்தோடு தான் பரிமாற வேண்டும். நம் வீட்டிலுள்ள அரிசியாக இருந்தாலும், தானியமாக இருந்தாலும் முழுமையாக தீருவதற்கு முன்பே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்று வந்து, நம்மிடம் உணவு கேட்பவர்களுக்கு மனதார உணவினை தானம் அளிக்க வேண்டும். அறை குறை மனதோடு அளிக்கப்படும் தானம் பலன் அற்றது.


வழிபடும் முறை


* முதலில் சிறிய தாம்பூலத் தட்டில் அரிசி பரப்பி அதன் மேல் அன்னபூரணியை வைக்க வேண்டும்.


* அன்னபூரணியின் கையிலிருக்கும் கரண்டியிலும் ஒன்றிரண்டு அரிசிகளைப் போட்டு வைக்க வேண்டும்.


* செவ்வாய்க்கிழமைகளில், வெள்ளிக்கிழமைகளில் அல்லது பெளவுர்ணமி நாட்களில் அன்னபூரணியை வழிபட்டு வருவது நல்லது...


*  வழிபாட்டின் பொழுது முதலில் விநாயகர் மந்திரங்களை உச்சரித்த பின், அன்னபூரணியின் ஸ்லோகங்களையும் துதிகளையும் உச்சரிக்க வேண்டும்.


* வாசனை மிக்க மலர்களால் அர்ச்சிக்க அன்னபூரணியின் அருள் நமக்கு விரைவாக கிடைக்கும்.


* பின்னர் மிக மிக முக்கியமான விஷயம் உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்வதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் அரிசி, பருப்பு போன்ற பொருள்களையும் தானம் செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.


* வீட்டிற்கு யாசகம் கேட்டு வருபவர்களுக்கு பணமாக கொடுக்காமல் அரிசியாக கொடுத்து அனுப்புங்கள். இவற்றையெல்லாம் கடைபிடித்தால் அன்னபூரணியின் அருள் கிடைத்து வறுமை இல்லா வாழ்வு பெறலாம்.


* சில குழந்தைகள் சோறு ஊட்டும் பொழுது சாப்பிடாது. குழந்தைகள் நல்ல முறையில் உணவு உண்ணவும், உடல் திடகாத்திரம் அடையவும் அன்னபூரணியை வழிபட வேண்டும்.


* உணவு ஊட்டும் முன்னால் தினமும் குழந்தையின் கையால் ஒருபிடி அரிசியை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். 45 நாட்கள் தொடர்ந்து அன்னபூரணி படத்தின் முன் அந்த அரிசியைச் சேர்த்து வைக்க வேண்டும். ஒரு மண்டல அரிசி சேர்ந்த பிறகு, அதோடு நாமும் கொஞ்சம் அரிசியைச் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் செய்யலாம்....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,