வாழ்நாளெல்லாம் திருக்குறள் நெறி பரப்பியவர்
ஓய்வெடுக்கத் தனி அறை வாய்ப்பற்ற சூழலைப் பொருட்படுத்தாமல் நூலகத்தின் ஓர் அறையில் கைப்பையையே தலையணையாய்க் கொண்டு சற்று ஓய்வெடுத்துப் புத்துணர்வோடு சொற்பொழிவு மாமழையை, கேட்போர் உள்ளம் குளிர, அறிவுப் பயிர் வளர வழங்குவார். இந்த எளிமையும் அர்ப்பணிப்பும்தாம் இளங்குமானார்.வாழ்நாளெல்லாம் திருக்குறள் நெறி பரப்பியவர் அவர். தமிழ்வாழ்வின் தலைநாள்களில் மாணவர்கள் மனங்கொண்ட "திருக்குறள் கட்டுரைகள்' என்னும் பத்துத் தொகுதிகளைப் படைத்தார் என்பதும் அவற்றை அற்றைநாள் இந்திய பிரதமர் ஜவாஹர்லால் நேரு காந்திகிராமத்தில் நடைபெற்ற குழந்தைகள் விழாவில் 1963-இல் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கன.
2005-ஆம் ஆண்டு அவர் உரை வரைந்த புறநானூற்றை உள்ளடக்கிய சங்க இலக்கிய நூல்கள் தில்லியில் இந்தியக் குடியரசுத்தலைவர் மாளிகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமால் வெளியிடப்பட்டன என்பதும் அவர் வாழ்வின் ஒளிமிகுந்த இன்னொரு நிகழ்வாகும்.
ஆசிரியப் பணியின் அருமையை உணர்ந்து தமிழக அரசு நல்லாசிரியர் விருது நிறுவிய 1978-இல் அவ்விருதை முதன்முதலில் பெற்றவர் இளங்குமரனாரே.
நன்றி: தினமணி
Comments