எம். ஜி. ஆர் செய்த உதவி நடிகர் பாலாஜி!


 எம். ஜி. ஆர் செய்த உதவி

நடிகர் பாலாஜி!
நான் சினிமா உலகத்திற்கு வந்த பொழுது மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்தேன்.
எம்ஜிஆர் அவர் அவர்களுடன் என் கடமை என்ற படத்தில் மட்டும் நான் நடித்து உள்ளேன்.
ஒரு தீபாவளி பண்டிகையின்போது
ஒரு ரூபாய் கூட இல்லாமல் மிகவும் கவலையோடு நான் கடைவீதியில் வந்து கொண்டிருந்தேன்
என்னை கடந்து எனக்கு முன்னால் ஒரு
கார் நின்றது.
காரின் ஜன்னல் வழியாக ஜானகி அம்மையார் என்னை அழைத்தார்.
நான் அருகில் சென்று பார்த்த பொழுது எம்ஜிஆர் உள்ளே அமர்ந்திருந்தார்
என்னிடம் எப்படி இருக்கிறாய் எத்தனை படங்களில் நடிக்கிறாய் என்று என் குடும்ப நலனை விசாரித்தார். பின்னர் நான் உன்னை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்.
எதற்கும் கவலை படாதே என்று கார் புறப்படும்போது என்னிடம் என் கையில் எம்ஜிஆர் பணம் கொடுத்தார்
பிரித்துப் பார்த்தேன்! பத்து100ரூபாய் நோட்டுக்கள் ஆயிரம் ரூபாய் இருந்தது. நினைத்து பாருங்கள்...
அன்று ஆயிரம் ரூபாய் என்பது இன்று
லட்சத்துக்கு சமம்.
என் குடும்பத்திற்கு ரெடிமேட் துணிகள் வாங்கிக்கொண்டு
குழந்தைக்கு பலகாரங்கள் வாங்கிக்கொண்டு
வீட்டிற்குச் சென்றேன்..
கொஞ்சம் கடன் இருத்ததில் எல்லாருக்கும்
கொடுத்தது போக என் கையில் எம்ஜிஆர் கொடுத்த பணத்தில் இப்பொழுது 300 ரூபாய் மட்டும் என்னிடம் இருந்தது.
பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 100 ரூபாய் 100 ரூபாய் எடுத்து செலவழித்தேன்.
இப்போது எம்ஜிஆர் கொடுத்த பணத்தில்100 மட்டும் என்னிடம் இருந்தது
அடுத்து என் செலவுக்கு பணம் இல்லை என்றால் இந்த நூறு ரூபாயை எடுத்து செலவழிக்கலாம் என்று நினைத்தேன்
என் மனதிற்குள் எம்ஜிஆர் கொடுத்த அந்த அதிர்ஷ்டமான பணத்தை செலவழிக்க கூடாது என்று நினைத்தேன்.
அடுத்து அடுத்து எனக்கு பட வாய்ப்புகள் வந்தது
எம்ஜிஆர் கொடுத்த நூறு ரூபாயை மணி பர்ஸில் போட்டோ வைக்கும் அறையில் வைத்து அந்தப் பணத்தில் எம்ஜிஆர் என்று பெயர் எழுதி வைத்தேன்.
அதற்குப் பிறகு எனக்கு பணத்திற்கு மேல் பணம் வந்து கொண்டே இருந்தது
இப்பொழுதும் எம்ஜிஆர் கொடுத்த அந்த நூறு ரூபாயை என் பர்ஸில் பத்திரமாக வைத்துள்ளேன்
இவ்வாறு நடிகர் பாலாஜி அவர்கள் திரை உலகம் பத்திரிகையில் பேட்டி கொடுத்தார்.
அதன் பிறகு பாலாஜி அவர்கள் படத்தயாரிப்பாளர் ஆனார்
மலையாள நடிகர் மோகன்லால் அவர்கள்
நடிகர் பாலாஜியின் மகளைத் திருமணம் செய்துள்ளார்.
இப்படி எல்லாம் எம்ஜிஆர் வறுமையில் உள்ளவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த காரணத்தினால் தான்
மக்கள் சக்தி உடைய தலைவரானார்...
எனக்கு ஒரு வருத்தம் அவரை வைத்து
ஒரு படம் கூட எடுக்க
முடியவில்லை என்பது தான்..
-----இந்த பேட்டி 1970 ஆம் ஆண்டு
வெளி வந்தது.
முகநூல் பதிவு
May be an image of 1 person and text that says "Ram Ram"

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்