ராமராஜன் படங்களின் ஸ்பெஷாலிட்டி
கெட்ட வாடையே இல்லாத படம் அதை விட ராமராஜன் படங்களின் ஸ்பெஷாலிட்டி என்று சொல்ல வேண்டுமானால், கெட்ட பழக்கங்களை, கெட்ட நடத்தைகளைக் கற்றுக் கொடுக்கும் படங்களாக இல்லாமல், நல்ல விஷயங்களைச் சொல்லும் பாடமாக அமைந்திருக்கின்றன என்பதுதான். உண்மையிலேயே இது பாராட்ட வேண்டிய விஷயம்.. இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று ராமராஜனை தாராளமாக சொல்லலாம்.
கரகாட்ட ராஜா... டான்ஸே ஆடத் தெரியாதவர் ராமராஜன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு கால் தேர்நத கரகாட்டக்கார நிபுணராக நடித்த படம்தான் கரகாட்டக்காரன். அந்தப் படம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இடம் பெற்ற படம். படத்தின் வசனம், கேரக்டர்களின் அணிவகுப்பு, கதை சொன்ன விதம், அருமையான நடிப்பு .. முத்தாய்ப்பாக ராஜா இசை. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சிரிப்புக் களஞ்சியம் இது.. தில்லானா மோகனாம்பாள் போல.
கிராமங்களுக்கு கெளரவம் கொடுத்தவர் எல்லாவற்றையும் விட ராமராஜனை நாம் பாராட்டியே ஆக வேண்டிய விஷயம் என்ன தெரியுமா..
கிராமங்களுக்கும், அந்த கிராமத்து மக்களின் வெள்ளந்தி வாழ்க்கைக்கும், அதன் பசுமையான சூழலுக்கும் கொடுத்த கெளரவம்தான். ராமராஜன் நடித்துக் கொண்டிருந்த காலம் வரை கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பல படங்கள் கிராமங்களைத்தான் சுற்றிச் சுற்றி வந்தன. கிராமத்து வாழ்க்கையை மிக அழகாக வெளிக்காட்டிய பல படங்களை நம் மக்கள் அந்தக் காலகட்டத்தில் காண முடிந்தது.
நன்றி: பிலிம் பீட்
Comments