எண்ணற்ற மருத்துவப் பலன்களை வழங்கும் இஞ்சி, புதினா, தேன், நெல்லிக்காய்...

 


எண்ணற்ற மருத்துவப் பலன்களை வழங்கும் இஞ்சி, புதினா, தேன், நெல்லிக்காய்...


 இன்னும் பல..!!*


இன்றைய நமது மாறுபட்ட உணவுப் பழக்கத்தால் பலருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னை செரிமானக் கோளாறு. பெரியவர்கள் தொடங்கு குழந்தை வரை பலருக்கும் இந்த பிரச்னை உள்ளது. இதற்கு மருத்துவர்களை சென்று பார்ப்பதை விடவும், வீட்டு மருத்துவம் சிறந்ததாகும்.

 



செரிமானக் கோளாறு பிரச்னை Dyspepsia என்று மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது. சரியாக சாப்பிடாமல் இருந்தாலும், மாறுபட்ட உணவுப் பழக்கம் கொண்டிருந்தாலும் எளிதாகவே செரிமானக் கோளாறு வந்துவிடும். வயிறு உபசமாக இருப்பது, வயிறு வலிப்பது, அடிக்கடி வயிற்றில் இருந்து சத்தம் வருவது போன்றவை செரிமானக் கோளாறுக்கான அறிகுறிகள். உணவு சாப்பிட்டதும் படுப்பது, முறையற்ற உணவுகளை சேர்த்து சாப்பிடுபவது, மது அருந்துவது, பொறுமையின்றி வேகவேகமாக சாப்பிடுவது போன்றவை செரிமானக் கோளாறுகளை நிச்சயம் ஏற்படுத்தும். இதுபோன்று மாறுபட்ட உணவுப் பழக்கம் மட்டுமில்லாமல் கணைய அழற்சி, இரைப்பைப் புற்றுநோய், இரைப்பை அழற்சி போன்ற பிரச்னைகளை கொண்டவர்களுக்கும் செரிமானக் கோளாறு பிரச்னை உருவாக அதிக வாய்ப்புள்ளது.


இஞ்சி மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு


சாப்பிட்டவுடன் சக்கரை சேர்க்காமல் எலுமிச்சைப் பழச்சாறு கொடுக்கலாம். இது வயிற்று எரிச்சல் மற்றும் வலியை போக்கும். அதேபோல இஞ்சியில் சமைக்கப்பட்ட உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்வதால் வயிறு சார்ந்த அழற்சி பிரச்னைகள் குணமாகும். வயிறு உப்சம், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றுவது கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதையடுத்து செரிமான பிரச்னை குணமடையும்.


புதினா மற்றும் நெல்லிக்காய்


வாய் தூர்நாற்றத்தை விரட்டு புதினாவுக்கு செரிமானக் கோளாறுகளை சரிசெய்யும் பண்புகள் உள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் குடல் தசைகள் மிருதுவாகும். இந்த பிரச்னையால் தோன்றும் வாய் குமட்டலை விரட்டு. பொதுவாக உணவு சாப்பிட்டவுடன் புதினால் இலைகளை சாப்பிடலாம். முடிந்தால் புதினாவில் தேநீர் செய்தும் குடிக்கலாம். ஒருநாளுக்கு ஒருமுறை மரநெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் செரிமான பிரச்னையை குணமடையச் செய்யும்.


சமையல் சோடா மற்றும் பட்டை


இவை இரண்டுக்குமே வயிற்றுக்குள் உள்ள அமிலத்தை சமன் செய்யும் பண்புகள் உள்ளன. அதனால் ஒருநாளுக்கு ஒருமுறை டேபிள் ஸ்பூனை சமையல் சோடாவை தண்ணீரில் கலந்து குடித்து வருவது செரிமான பிரச்னையை குணமாக்கும். முடிந்தால் சமையல் சோடாவை தேனில் கலந்தும் குடிக்கலாம். பட்டைக்கு  ஆண்டி ஆக்சிடண்ட் பண்புகள் உள்ளன. அதனால் இதுவும் செரிமானக் கோளாறுக்கு அருமருந்தாகும் செயல்படும். தினமும் நாம் குடிக்கும் தேநீரில் பட்டைத் தூளை கலந்து குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.


பெருஞ்சீரகம் மற்றும தேன்


சில நுண்ணுயிர் தொற்று காரணமாகவும் செரிமானக் கோளாறு ஏற்படும். அதை குணப்படுத்த தேன் அருந்துவது நல்ல பலனை தரும். வெறும் வாயை விடவும், வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து சாப்பிடுவது இந்த பிரச்னைக்கு நல்ல பலனை தரும். இரைப்பையில் இருக்கும் பிரச்னையை சரிசெய்ய பெருஞ்சீரகம் உதவும். வெந்நீரில் போட்டு பெருஞ்சீரகத்தை கொதிக்க வைத்து குடித்து வருவதும் செரிமானப் பிரச்னைக்கு நல்ல தீர்வை வழங்கும்  

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி