வெற்றி தரும் விஷ்வக்சேனர் விரத வழிபாடு

 


வெற்றி தரும் விஷ்வக்சேனர் விரத வழிபாடு



இன்று காலை 10.25 மணி முதல் நாளை காலை 8.47 மணி வரை பூராட நட்சத்திரம்.

இன்று விரதம் இருந்து விஷ்வக்சேனரை வழிபட மறக்காதீர்கள்.

பகவான் விஷ்ணுவின் நெருங்கிய தொண்டர்களாக அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் ஆகிய 3 பேரை சொல்வார்கள். பெருமாள் படுத்து தூங்கும் ஆதிசேஷ பாம்பணையை அனந்தன் என்பவார்கள். கருடன், பெருமாள் ஏறிச் செல்லும் வாகனமாக கருதப்படுகிறது. அது போல விஷ்வக்சேனரை பெருமாளின் முதன்மைத் தளகர்த்தர் என்று சொல்வார்கள்.


பெருமாள் கோவில்களில், விஷ்வக்சேனர் சந்நிதி நிச்சயமாக இருக்கும். தமிழில் அவரை சேனை முதலியார், சேனாதிபதி ஆழ்வான் என்று அழைப்பார்கள். அவருடைய அனுமதியின்றி பகவான் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை என்றும் சொல்வது உண்டு. பொதுவாக எந்த பூஜையோ, வழிபாடோ, உற்சவமோ செய்வதாக இருந்தாலும், முதலில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்து விட்டுதான் மற்ற பூஜைகளைச் செய்வார்கள்.


ஆனால் வைணவத்தில், விஷ்வக்சேன ஆராதனையை முடித்து விட்டுத்தான் திருமஞ்சனம், திருக்கல்யாண உற்சவம், திருவீதிவலம் செய்வார்கள்.


பெருமாள் வீதி உலா வருவதற்கு முன் விஷ்வக்சேனர் வலம் வந்து, அனுமதி தந்த பிறகுதான் பெருமாள் வீதிகளில் எழுந்தருள்வார். விஷ்வக்சேனருடைய நட்சத்திரம் ஐப்பசியில் பூராடமாகும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐப்பசி பூராடம் வருகிறது. இன்று காலை 10.25 மணி முதல் நாளை காலை 8.47 மணி வரை பூராட நட்சத்திர நேரமாகும். இன்று விரதம் இருந்து இந்த நேரத்தில் அவரைப் போற்றி வணங்க எம்பெருமானுடைய அருள் பூரணமாக கிடைக்கும். எந்த முயற்சிகள் செய்தாலும் அவை அனைத்திலும் வெற்றி கிடைக்கும். எனவே இன்று விரதம் இருந்து விஷ்வக்சேனரை வழிபட மறக்காதீர்கள்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி