*இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணம்
*இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணம் தொடங்கியது: சூரியனை நிழல் மறைக்கும் காட்சிகள்*
சென்னை: வட இந்தியா முழுவதும் சூரிய கிரகணம் தெரிகிறது. இந்தியாவில் காஷ்மீரின் லேவில் தொடங்கி டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், லக்னோ நகரங்களில் சூரிய கிரகணம் தொடங்கியது. இந்தியாவின் முதல் மாநிலமாக பஞ்சாபின் சண்டிகரில் 4.23 மணிக்கு சூரிய கிரகணம் தெரிந்தது. வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம் என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ராஜஸ்தான், காஷ்மீர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிகிறது.
சுமார் 1 மணி 45 நிமிடங்கள் தென்படும் சூரிய கிரகணத்தை மாலை 5.30 மணி அளவில் முழுகிரகணத்தை பார்க்க முடியும். இந்தியாவில் 4.36-க்கு தொடங்கிய சூரிய கிரகணம் மாலை 5.30 மணிக்கு உச்ச நிலையை எட்டும் என நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர். பூமி ,சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு தான் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் சூரியகிரகணம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காஷ்மீர், உத்திரபிரதேசம் உள்பட வட இந்தியாவில் சூரிய கிரகணம் தெரிந்து வருகிறது. ரஷ்யாவின் தெற்கு பகுதிகள் ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். சென்னையில் இந்திய நேரப்படி மாலை 5.13 மணிக்கு சூரிய கிரகணம் ஆரம்பித்தது.5.44 மணி வரை சூரிய கிரகணம் தெரியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அதிகபட்சமாக 8 விழுக்காடு மட்டுமே தமிழகத்தில் சென்னையில் சூரிய கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மாலை 5.14 மணிக்கு சென்னையிலும் தெரியத் தொடங்கிய சூரிய கிரகணத்தை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் திரண்ட சிறுவர், சிறுமியரும் ஆர்வத்துடன் சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.
கொடைக்கானலில் மாலை 4.36 மணியிலிருந்து சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது. இது தான் இந்த ஆண்டு கடைசி சூரிய கிரகணம். வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம் என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு சில கோயில்கள் நடை அடைக்கப்படும் சில கோயில்கள் நடை திறக்கப்பட்டுள்ளது. சுரிய கிரகணத்தை காண கொடைக்காணல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்....
Comments