அழகிய கிராமம் முழுவதும் பைத்தியக்காரர்கள்

 


அழகிய கிராமம் முழுவதும் பைத்தியக்காரர்கள்: எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவிழ்த்த மர்மம்

புத்தக வெளியீட்டில் பங்ககேற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார், தனது வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார். அப்போது கேள்வி கேட்ட வாசகர்கள் பொரும்பாலும், ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்டனர். அந்த கேள்வி, ''இத்தனை நாவல்கள் எழுதி இருக்கிறீர்கள், இதற்கான கதை கருவை எங்கிருந்து, எப்படி எடுக்கிறீர்கள் ?'' என்பதான்.
அதற்கு அவர், ''என் கதைகளுக்கான கருவை உங்களிடமிருந்துதான் எடுக்கிறேன். உங்களை போன்ற வாசகர்களும், பொதுமக்களும்தான் என் கதைகளுக்கான கருவை தருகின்றனர்'' என்றார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த அவரிடம், ''சார் நீங்கள் சமீபத்தில் எழுதிய 'மீண்டும் ஒரு ஆகஸ்ட் 15' நாவல் எப்படி உருவானது என சொல்லமுடியுமா ? என, கேட்ட போது, அவர் சிரித்துக்கொண்டே ''நீங்க என் வீட்டுக்கு வாங்க'' என்றார். மறுநாள் நாம் அவர் வீட்டில் ஆஜர்!புன்னகையுடன் சோபாவில் வந்தமர்ந்த ராஜேஷ்குமார், என் கேள்விக்கு சாவகாசமாக பதிலளித்தார்.
'என் வாசகர் ஒருவர், பழைய இன்லேண்ட் லெட்டரில், பென்சிலால் கடிதம் எழுதி இருந்தார். அதில், அவர் எழுதி இருந்த விஷயத்தை படித்த போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதில் அவர் 'எங்கள் கிராமத்தில், 2000 பேருக்கு மேல் இருக்கிறோம். இதில் சிலர் திடீரென மனநிலை பாதிக்கப்பட்டு, பைத்தியமாகி விடுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், 60 க்கும் மேற்பட்ட பேர் பைத்தியமாகி விட்டனர். இது பேய், பிசா, ஆவிகள் செய்யும் வேலை என்று சொல்கின்றனர். பலர் பயந்து ஊரை விட்டே போய் விட்டனர். இன்னும் கொஞ்ச நாளில் கிராமம் முழுவதும் காலியாகிவிடும்' என, எழுதி இருந்தார்.அதை படித்தவுடன் அதிர்ச்சியாகி விட்டேன். அந்த வாசகரை பார்க்க, அவரது கிராமத்துக்கு போய் இருந்தேன்.
உண்மையில் மிக அழகான பசுமை நிறைந்த, வனப்பகுதிக்குள் இருந்தது அந்த கிராமம். பரந்து விரிந்த அந்த நிலப்பகுதியும், மண்ணும், அங்கிருந்த மரங்கள், தாவரங்கள் எல்லாம் இயற்கை வளம் செழித்திருந்தது.இந்த இடத்தில் வாழ்ந்தால், தீராத நோயும் தீர்ந்து போகும். ஆனால், இங்கு வாழும் மக்களுக்கு பைத்தியம் பிடிக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.இந்த நிலத்தை அபகரிக்க, யாரோ மாஸ்டர் பிளான் போடுகிறார்கள் என, கிரைம் மூளையில் ஒரு சின்னப்பொறி தட்டியது. இயற்கை வளமுள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்குள் நுழைய, வல்லரசு நாடுகள் இதுபோன்ற நோய்களை, அங்குள்ள ஏஜென்ட்களை வைத்து பரப்பி, மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த பகுதியை ஆக்கிரமித்து, அங்குள்ள கனிம வளங்களை சுரண்டும் பழக்கம் இன்று வரை உள்ளது.
இதை, இந்த கிராமத்தோடு தொடர்புபடுத்தி பார்த்தேன். உண்மையில் இந்த கிராமத்தை காலி செய்ய, திட்டமிட்டு இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அப்போது எனக்குள் உருவான கருதான், 'மீண்டும் ஒரு ஆகஸ்ட் 15' நாவல். அந்த கிராமத்துக்கு 'வாடாமல்லி கிராமம்' என, பெயர் வைத்தேன். கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டால், துாணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வார்கள். கதைக்கான கருவும் அப்படித்தான். எல்லா இடத்திலும், எல்லோரிடமும் கதைகள் இருக்கின்றன.
எழுத்தாளர் ஒரு காட்சியை அல்லது ஒரு சம்பவத்தை, எந்த கோணத்தில், எப்படி பார்க்கிறார் என்பதுதான் முக்கியம்.அதில் இருந்து கிடைக்கும் கதை கருவை, நம் கற்பனை வளத்தால் எப்படி, 200 பக்க நாவலாக வளர்த்து எடுக்கிறோம் என்பதில்தான், ஒரு எழுத்தாளரின் திறமை இருக்கிறது.- விடைபெற்று வெளியே வந்தபோதுதான் உணர முடிந்தது...எப்படி ராஜேஷ்குமார் நாவல் உலகின் முடிசூடா ராஜாவாக திகழ்கிறார் என்பதை.
நன்றி: தினமலர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,