ஈரமான வரைதிரையில் 'ஓடும் குதிரை'


 ஈரமான வரைதிரையில் 'ஓடும் குதிரை'

சுனிதா குமார் ஒரு பிரபல ஓவியர் மற்றும் ஒரு சமயத்தில் அன்னை தெரசாவின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அவரது கணவர் நரேஷ்குமார், இந்திய டேவிஸ் கோப்பை அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.
சுனிதா கூறுகிறார்- "டெல்லியில் நடந்த ஒரு விருந்தில் நான் முதல் முறையாக ஹுசைனை சந்தித்தேன். அடுத்த நாள் நடைபெறவிருக்கும் தேசிய டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியைக் காணவருமாறு அவரை அழைத்தேன். மார்க் ஆண்டர்சன் வெற்றி பெறுவார் என்று ஹுசைன் பந்தயம் கட்டினார்."
"விஜய் அமிர்தராஜ் வெல்வார் என்று நான் பந்தயம் வைத்தேன். பந்தயத்தில் தோற்றவர் தன் கையால் வரைந்த ஓவியத்தை வெற்றிபெறுபவருக்கு கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. விஜய் அமிர்தராஜ் டென்னிஸ் போட்டியில் வென்றார். ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஹுசைனிடம் கேட்க நான் துணியவில்லை."
நாங்கள் ஓபராய் ஹோட்டலில் தங்கியிருந்தோம். நாங்கள் வெளியே செல்லும்போது ,​​ 'ஹூசைன் அவர்கள், உங்களுக்காக ஒரு பாக்கெட்டை விட்டுச்சென்றுள்ளார்' என்று வரவேற்பாளர் கூறினார். போட்டியைக் காண அழைத்தமைக்கு நன்றி கூறும் ஒரு குறிப்பு அதில் இருக்கலாம் என்று நான் நினைத்தேன்.
"நான் பாக்கெட்டைத் திறந்தபோது, ​​ஹுசைனின் கைவண்ணத்தில் உருவான ஒரு குதிரையின் ஓவியம் அதில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
வண்ணப்பூச்சு இன்னும் ஈரமாக இருந்தது. ஏனெனில் எண்ணெய் வண்ணப்பூச்சு மிக விரைவாக உலராது. ஹுசைன் ஒரே இரவில் அந்த ஓவியத்தை வரைந்து அதை என்னிடம் வழங்கினார், " என்றார் சுனிதா.
நன்றி: பிபிசி தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,