தீபாவளி ஸ்பெஷல் பாதாம் ரெசிபிக்கள்*

 


தீபாவளி ஸ்பெஷல் பாதாம் ரெசிபிக்கள்*


நட்ஸ் பற்றிய பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். அதனுடைய நன்மைகளை, மருத்துவ பயன்களை எல்லாம் கேட்டிருப்போம். அதில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் இருக்கிறது. இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான். அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதம் பருப்பில் எண்ணிலடங்கா சத்துக்கள் உள்ளன. பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது. இந்த பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். இவற்றைத் தவிர அதில் சிறப்பு உணவுகளை சமைத்தும் சாப்பிடலாம். கிச்சன் வாசகிகளுக்காக பிரத்யேகமான பாதாம் ரெசிபிக்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.


ஆல்மண்ட் ஸ்வீட் பொட்டேடோ டோஸ்ட்


தேவையானவை : தோல் உரிக்கப்படாத பாதாம் - 3/4 கப், பிரெட் துண்டுகள் - 4, வட்டமாக வெட்டப்பட்டு ரோஸ்ட் செய்யப்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப், உப்பு - சுவைக்கு ஏற்ப, மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன், சாட் மசாலா - 1/2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 1/2 டீஸ்பூன், கிரீன் சட்னி - 1 மேசைக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன், மயோனைஸ் - 1 டீஸ்பூன்.


செய்முறை : பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக்கொள்ளவும். அதேபோல் பிரெட் துண்டுகளையும் நன்கு டோஸ்ட் செய்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிரெட் மற்றும் வறுத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நறுக்கிய பாதாமினை தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிரெட் துண்டுகள் மேல் சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை வைத்து அதன் மேல் கலந்த மசாலாக்களை பரப்பி அதன் மேல் பாதாமினை தூவி பரிமாறவும். குழந்தை விரும்பும் மிகவும் ஆரோக்கிமான மற்றும் சத்துள்ள காலை உணவு.


ஆல்மண்ட் அமரந்த் கபாப்


தேவையானவை : பாதாம் பருப்பு - 1/2 கப், அமரந்த் பொடி - 1/2 கப், பாதாம் மாவு - 1/2 கப், நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன், வேகவைத்த மசித்த உருளை - 2 மேசைக்கரண்டி, உப்பு - தேவைக்கு, மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா பவுடர் - 1/4 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - 1 மேசைக்கரண்டி, எண்ணெய் - பொரிக்க, நறுக்கிய வெங்காயம் - 3 மேசைக்கரண்டி.


செய்முறை : பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அமரந்த் பொடி, பாதாம் மாவு, நறுக்கிய பாதாம், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், வேகவைத்த மசித்த உருளை, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா பவுடர், கொத்தமல்லித் தழை, நறுக்கிய வெங்காயம் அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி வைக்கவும். எண்ணெய் சூடானதும் பொரிக்கவும். கிரீட்

சட்னியுடன் பரிமாறவும். மாலைநேர சுவையான ஸ்னாக்ஸ்.


ஆல்மண்ட் காலிபிளவர் ரைஸ் சாலட்


தேவையானவை : தோல் உரிக்

கப்படாத பாதாம் - 1 கப்,

துருவிய காலிபிளவர் - 2 கப்,

உப்பு - சுவைக்கு ஏற்ப,

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், கொத் தமல்லித் தழை - 1 மேசைக்கரண்டி,

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,

நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,

நறுக்கிய பச்சை மிளகாய் -

1 டீஸ்பூன்,

சீரகம் - 1/2 டீஸ்பூன்,

ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.


செய்முறை : பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் துருவிய காலிபிளவரை சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். அதன் பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு அதில் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழை, மிளகுத்தூள், உப்பு மற்றும் பாதாமினை சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான சத்துள்ள சாலட். டயட் இருப்பவர்களுக்கு இது மிகவும் ஆரோக்கியமான உணவு.


பாதாம் பிசின் பாயசம்


தேவையானவை:

பாதாம் பிசின் - ஒரு கப்

 ( முதல் நாளே ஊறவைத்தது)

பாசிப் பருப்பு - கால் கப்

வெல்லம் - அரை கப்

நெய் - 2 ஸ்பூன்

முந்திரி, திராட்சை - கால் கப்

பாதாம் -20.


செய்முறை:

பாதாம் பிசினை முதல் நாளே ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பாசிப் பருப்பை கடாயில் வறுத்து அதை குக்கரில் 4 விசில் வரும் வரை  வேக விடவும். பாதாம்

பருப்புடன் ஊறவைத்த பாதாம் பிசினை தண்ணீர் ஊற்றி அரைக்கவும். வெல்லத்தை தனியாக  உருக்கிக்கொள்ளுங்கள்.பருப்பு  வெந்ததும் உருக்கிய வெல்லத்தையும்  சேர்த்து கலக்கவும். கெட்டியான பதம் வரும் வரை கொதிக்க விடவும். இறுதியாக அரைத்த பாதாம் பிசினை சேர்த்து நெய் விட்டு முந்திரி சேர்த்து வதக்கி பாயசத்தில் ஊற்றிக் கிளறவும்.  சுவையான பாதாம் பிசின் பாயசம் தயார்....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,