வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்

 


தென்றல்

விழுந்த பல்
விழுந்து போன பல்லைக் கூட
விழுந்து கும்பிட வேண்டுமென்றால்,
பல் புத்தனுடையதாக இருக்க வேண்டும்.
******
நேற்று என்பது வெட்டி எறிந்த நகம்,
நாளை என்பது வெளுக்கப் போகிற கறுப்பு முடி.
******
ஓடுகிற வரை நீ நதி.
நின்றால் குட்டை!
******
வெந்த சோறே மனிதனுக்கு செரிப்பதில்லை.
குருவியின் குடல், நெல்லைக் கூட அரைத்து
நீராக்கி விடுகிறது.
******
மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்காக
நீ கவலைப்பட்டால்,
தாயக்கட்டைகளே,
தாண்ட முடியாத மலைகளாகிவிடும்.
உனது அபிப்பிராயங்களுக்காக
மற்றவர்கள் கவலைப்பட்டால்
நிலவே உனக்கு நெற்றிப் போட்டாகும்.
******
உப்பு, செத்தவற்றைப் பாதுகாப்பதற்காக
உபயோகப்படுத்தப்படுகிறது.
அதை உயிரோடிருப்பவர்கள்
சேர்க்கிறோமே ஏன்?
******
குழந்தைகளை அடிகிறவர்கள்
தண்டனைக்குத் தப்பி விடுகிற கொலைகாரர்கள்.
******
மிருகங்கள் குழந்தைகளை அடிப்பதை
நான் ஒருபோதும் பார்த்ததில்லை.
நீதான் கோழி மிதித்து
குஞ்சு சாவதில்லை என்று
கோழிக்கே சொன்னவன்.
---வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் எழுதிய ''எல்லா ராத்திரிகளும் விடிகின்றன''என்ற நூலிலிருந்து.
இணையத்தில் படித்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,