சோழ தேசங்கள் *#தஞ்சை #அரியலூர்

 


சோழ தேசங்கள் *#தஞ்சை #அரியலூர்*


சோழ தேசம் அப்படின்னு சொன்னாலே நம்ம சிந்தனை போவது என்னவோ  #தஞ்சை_டெல்டா வை நோக்கி தான் !


ஆனால் தன் தந்தைக்கு (ராஜராஜ சோழனுக்கு) பிறகு அவரது மகனாகிய 


அவரது ஆட்சி காலத்தில் சோழர் #படைதலைவனாக முடிசூட்டப்பட்ட 


" இராஜேந்திர சோழன் " 


தனது தலைநகரை தஞ்சையில் இருந்து 


அரியலூர் மாவட்டம் " கங்கை கொண்ட சோழபுரத்திற்கு " மாற்றி விட்டான் 


இந்த #சோழபுரம்  தான் ராஜேந்திரன் சோழன் ஆட்சி காலம்  ( கி.பி 1012 முதல் 1044 ) ல் இருந்து  கி.பி 1279 இல் ஆட்சி செய்த சோழர் வம்சத்தின் இறுதி வரை, #சோழ_சாம்ராஜ்யத்தின் தலைநகராக 256 ஆண்டுகள் இருந்தது. 


அதுமட்டுமல்ல தஞ்சை டெல்டா வை விட அதிக வரலாறு கொண்டதும் 


இந்த #அரியலூர்_பெரம்பலூர் மாவட்டம் தான் 


ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலும் இன்று உள்ள ஊர் பெயர்கள் கூட மிகப்பெரிய ஆதாரம் தான் 


இன்று " அரியலூர் பெரம்பலூர் " மாவட்டத்தில் உள்ள சோழர்களின் அடையாளம் கொண்ட ஊர்கள் 


கங்கை கொண்ட சோழபுரம் - 


ராஜேந்திரன் தனது பெரும்படையை கங்கை வரை கொண்டு சென்று அங்கு உள்ள மன்னர்களை வீழ்த்தி அவர்களாலே கங்கை நீரை சுமந்து வர வைத்து 


#வன்னிமர காட்டுக்கிடையே

இந்த கங்கை கொண்ட சோழபுரம் நகரையும் #சோழிச்சுரருக்கு கோவிலையும் கட்டினான் 


#மாளிகை_மேடு -


இராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்த இடம் 


#ஆயுதகளம் -


சோழர் படைவீரர்களின் ஆயுதங்கள் செய்யப்பட்டு வைத்திருந்த இடம் 


#படைநிலை -


போருக்கு செல்லும் சோழர் படை நிறுத்தி வைக்கப்படும் இடம் 

#வெற்றி_கொண்ட_சோழபுரம்(ஜெயங்கொண்ட சோழபுரம்)

சோழர்களின் வெற்றியை கொண்டாடிய இடம் 


 #கடாரம்_கொண்டான்

கடாரத்தை வெற்றியை நினைவாக நிறுவபட்ட ஊர் 


#வீரசோழபுரம்

சோழ வீரர்கள் வாழ்ந்த ஊர் 

 #மெய்காவல் புத்தூர்

மன்னனின் காவலர்கள் வாழ்ந்த ஊர் 


#உட்கோட்டை

சோழர்களின் கோட்டை அமைந்த ஊர் 


#கீழமாளிகை.

பொன்பரப்பினான் வாணகோவரையனின் மாளிகை இருந்த ஊர் 


#சிறுகளத்தூர்.

படை அணிவகுத்து புறப்பட்ட ஊர் செருகளத்தூர் இன்று சிறுகளத்தூர்.


#குவாகம். 

வாணரோ அல்லது சோழரோ தங்கியிருந்த ஊர் கோவகம் இன்று குவாகம். 


#வல்லம்.

வல்லத்தரையர் வாழ்ந்த ஊர் வல்லம்.

 #அசாவீரன்குடிக்காடு

உகந்தநாயகன் குடிக்காடு

அச்சலவீரன் குடிக்காடு இன்று அசாவீரன்குடிக்காடு


#சேடக்குடிக்காடு இது சேந்தவீரன்குடிக்காடாக இருக்கலாம் ஆராயப்பட வேண்டியது.

#விழுப்புனங்குறிச்சி 

விழுப்புண் குறிச்சி இன்று விழுப்புனங்குறிச்சி சோழர்களின் ரகசிசிய இரும்பு உருக்கு மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட இடம். 

#பாசளம் 

பாசறைக்களம் இருக்கலாம்.


#மருவத்தூர் 

மருவற்றூர் நீதி வழங்கும் இடம . இவ்வூரில் சோழையன் என்ற வகையறா உள்ளது. 

இங்கிருந்து சென்றவர்கள் சோழன்குடிக்காட்டினர்.

இவ்வூரிலிருந்து மேற்கே சுமார் 3கி.மீ தொலைவில் செந்துறைக்கு அருகில் காட்டில் சோழன் கோவில் ஒன்று உள்ளது. 

வாண்டரமடம் 

வாணதிரையன் பற்று இன்று வாணதிரையன் பட்டணம் (வாண்டரமடம்) 


#முனையதிரையன் பட்டி. 

முனையத்திரையன் பற்று இன்று முனையதிரையன் பட்டி. 


#வாரியங்காவல்.

சோழர்களின் காவல் வாரியம் இருந்த ஊர் வாரியங்காவல்.

இலையூர்,


#அங்கராயநல்லூர்  


" அங்கராயனூர் " சோழ படை தளபதி அங்கராயன் பெயரில் இருந்த ஊர் 


#கண்டியன்கொள்ளை


" சோழ படை தளபதி கண்டிய தேவர் பெயரில் இருந்த ஊர் "


#மீன்சுருட்டி


பாண்டிய படைகளை சோழ படைகள் வீழ்த்தி அவர்களின் மீன் கொடியை சுருட்டி கொண்டு ஓடிய ஊர் 

உஞ்சினி, சிறுகடம்பூர், இலைக்கடம்பூர், மாத்தூர், கஞ்சன்மலைப் பற்று இன்று கஞ்சமலைப்பட்டி (வருவாய் நிருவாகம் நடைபெற்ற ஊர், பொன்பரப்பினான் வாணகோவரையன் பற்று இன்றைய பொன்பரப்பி)


நல்லநாயகன் புரம், வஞ்சினபுரம், சொக்கநாதபுரம், பழமலைநாதபுரம்

நமங்குனம், நக்கம்பாடி(அரசன்/தளபதிகளின் பாடி வீடு இருந்த இடம்.


இடைய குறிச்சி, இருங்கோவேள் குறிச்சி இன்று இருங்களாக்குறிச்சி, மாராக்குறிச்சி( மாறன் குறிச்சி/ மறவன் குறிச்சி)

 இடையகுறிச்சி, பெரியாக்குறிச்சி, பிலாக்குறிச்சி, இரும்புலிக்குறிச்சி, சோழங்குறிச்சி,

சேந்தமங்கலம், 

தளவாய் (கோட்டைகளின் வாயில்கள் அமையும் இடம்) கோட்டைக்காடு, குறிச்சிகுளம், etc.....


மன்னர்களின் பெயர்களும் - இன்றைய ஊர்களும் 

===================================


#துங்கபுரம் -   குலோத்துங்க சோழபுரம் 


#விக்கிரமங்கலம் - " விக்ரம சோழன் மங்கலம் "


#இராயம்புரம் - இராஜகம்பீரசோழபுரம்


#பெரியதிருக்கோணம் - மதுராந்தக சோழன் புரம் ( மதுராந்தகபுரம் ) 


#பொன்பரபிப்பி - பொன்பரப்பின வானகோவரையன் 


#வங்காரம் - வங்கார முத்தரைய மங்கலம்


#இராஜேந்திரப்பட்டினம் - ராஜேந்திர சோழன் பட்டினம் 


#பழூர் ( T. பழூர், கீழப்பழூர், மேல பழூர் ) - பழுவேட்டரையர் நகரம் 


#ஆவணிகந்தர்வபுரம் - கந்தவர்மபுரம் ( கந்தவர்ம பல்லவன் )


#உடையார்_பாளையம் - பல்லவர்கள் உடைய பாளையம் 


#குழுமூர் - சோழ நாட்டின் சிற்றசர்கள் சோழ மாமன்னரோடு குழுமி ஆலோசனை செய்யும் இடமாகவும், வணிக நகராகவும் இருந்தது 


இது போக " வானதிராயன் குப்பம் , நயினார்குடிக்காடு , சோழங்குடிக்காடு , கொண்டியூர் (கொண்டியார்) , குலோத்துங்கநல்லூர்  காலிங்கராயநல்லூர் , போன்ற சோழன் படை தளபதி ஊர்களும் உள்ளன


இம்மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பெரும்பாலானவை, சோழர் காலத்தில் கட்டப்பட்டவை. இவற்றிற்கு


 #திருமழபாடி, கீழையூர் (முதலாம் ஆதித்யன்), 


#கீழபழுவூர்(முதலாம் பராந்தகன்), 


#காமரசவல்லி(சுந்தரசோழன்), 


#கோவிந்தப்புத்தூர்(உத்தமசோழன்), 


#செந்துறை(முதலாம் இராஜராஜன்), 


சென்னிவனம், பெரியதிருக்கோணம், கங்கைகொண்டசோழபுரம் (முதலாம் இராஜேந்திரன்) மற்றும்


#ஸ்ரீபுரந்தான்(மூன்றாம் இராஜராஜன்) ஆகிய ஊர்களில் உள்ள கோவில்கள் அழகிய எடுத்துக்காட்டுகளாகும்.


#எசனை: (பெரம்பலூர் )

மாமன்ன்ன் இராஜஇராஜ சோழன் தஞ்சை பெரிய கோவில் கோபுர உச்சியில் உள்ள 80 டன் எடை கொண்ட கல்லை இவ்வூர் மலையிலிருந்துதான் கொண்டு சென்றார் என்பது வரலாறு. சமீப காலத்தில் கூட திருப்பதி மலையில் சிலை செய்ய தகுந்த கல் இவ்வூர் மலையிலிருந்து கொண்டு சென்றனர்


#செங்குணம்:

செங்குணம் கிராமம் பெரம்பலூரிருந்து 8 கி.மீ தொலைவில் இங்குள்ள சிவன் கோவில் குலோத்துங்க சோழ மாமன்னனால் கட்டப்பட்டது. இன்றும் சில கல்வெட்டுகள் அங்குள்ளன.


#வாலிகண்டபுரம் - இங்குள்ள புகழ்பெற்ற வாலிகண்டேஸ்வரர் கோவில்  இராஜ இராஜனால் கட்டப்பட்டது..


இன்னும் பல ஊர்கள் பல சோழ பெருமைகளை உள்ளடக்கியது

 அரியலூர் மாவட்டம்..

(பகிர்வு)




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி