வில்லிசை வேந்தருக்கு அஞ்சலி
வில்லிசை வேந்தருக்கு அஞ்சலி
........
வில்லிசை வழியே சொல்லாடல் புரிந்த முகம்
தந்தனத்தோம் என்று சொல்லியே தமிழுக்கு பெருமை சேர்த்த முகம்
வெண்கல குரலில் வேகமாய் கதை சொல்லும் முகம்
கற்ற வித்தை எல்லாம் புவியில் பறை சாற்றிய முகம்
பெற்ற பிள்ளைகளையும்
இசையோடு தம் மேடையில் சேர்த்த அறிமுகம்
தனித்தன்மையோடு நாட்டுப்புறக் கலைஞராய் கலை வளர்த்த முகம்
தமிழர்களின் நெஞ்சமெல்லாம் ஈர்த்த வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம்...
என்றும் வாழ்வார் வில்லோடு....
தமிழ் சொல்லோடு....
முருக.சண்முகம்.
ஐயப்பன்தாங்கல்
சென்னை-56
Comments