ரேஷன் பொருள் குறைவா? புகார் தரலாம்!
ரேஷன் பொருள் குறைவா? புகார் தரலாம்!
போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரேஷன் கடைகளில், அரிசி உள்ளிட்ட பொருட்கள் குறைவாக வழங்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
இதுபோல, குறைத்து வழங்குவது, பதுக்கல் மற்றும் கடத்துதல் சட்டப்படி குற்றம். இது போன்ற செயலில் ஈடுபடுவோர் பற்றி, பொது மக்கள் புகார் அளிக்கலாம். குற்றம் செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிக்க, 94981 43807; 94981 07727; 94981 29306 என்ற, மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். புகார் அளிப்போர் மற்றும் தகவல் தெரிவிப்போர் பற்றி ரகசியம் காக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Comments