ஜோதிட சாஸ்திரத்தில், சனி தோஷத்திலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்த நாள் ரொம்பவே விசேஷமானது.
புரட்டாசி செவ்வாயில் இணைந்த அஸ்வினி நட்சத்திரம்..இந்த ஒரு பரிகாரம் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம்*
ஜோதிட சாஸ்திரத்தில், சனி தோஷத்திலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்த நாள் ரொம்பவே விசேஷமானது.
Perumal Telpe
ஜோதிட சாஸ்திரத்தில், சனி தோஷத்திலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்த நாள் ரொம்பவே விசேஷமானது. இந்தநாளில், எளிய வழிபாட்டின் மூலம் சனி தோஷத்தைப் போக்கிக் கொண்டு நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம். சனியின் கோபத்தில் இருந்து விடுபட செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்த இந்த நாளில் சில பரிகாரங்களை செய்தால் போதும்.
பொதுவாகவே செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதற்கும் முருக வழிபாடு செய்வதற்கும் உகந்த நாட்கள் என்கிறார்கள். காலையும் மாலையும் அம்மனை வணங்கி வழிபடலாம். அதோடு துர்க்கை வழிபாடும் சிறந்த ஒன்றாகும்.
அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி, செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்த நாள் மகத்துவம் மிக்கது. புரட்டாசி மாதத்தில், செவ்வாய்க்கிழமையும் அஸ்வினியும் இணைந்த பவுமாஸ்வினி நன்னாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது ரொம்பவே நல்ல பலன்களைத் தரக் கூடியது. அதேபோல், பன்னிரு ஆழ்வார்களுக்கு மாலைகள் சார்த்தி வணங்கலாம்.
சனி தோஷம் நீங்க, இந்த நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று,பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும். இந்தநாளில், பெருமாள் தரிசனம் செய்வது நற்பலன்களை வழங்கவல்லது. பெருமாளுக்கு மண்பானையில் தயிர்சாதம் நைவேத்தியமாக படைக்கலாம். அதனை ஏழை எளியோருக்கு அன்னதானமாக கொடுக்கலாம்.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இருந்து பாடல்களைப் பாராயணம் செய்யலாம். ஆழ்வார் பாசுரங்களைச் சொல்லி பாராயணம் செய்து வழிபடலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். அதோடு, சனிபகவானின் முன் எள் தீபம் ஏற்ற வழிபட்டு, தானம் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி கிரக தோஷம் நீங்கும். மேலும், சனி பகவான் மனம் குளிர்ந்து அருளை அள்ளி வழங்குவார் என்பது நம்பிக்கை.
Follow Us:
[11/10, 8:54 pm] +91 99407 62319: *Sarabesvara : தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு!*
ஒவ்வொரு மனிதனும் அவனுடைய இக்கட்டான சூழ்நிலைகளில், 'எல்லாம் என் தலையெழுத்து'.. என்று வருத்தப்பட்டோ அல்லது கோபப்பட்டோ சொல்வதுண்டு. ஆனால் அவர்களுக்கு சந்தோஷம் வரும் நேரத்தில் ஒருமுறை கூட ஒருவர் கூட, இத்தகைய நற்பலனை பெறுவதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று கேள்வி எழுப்புவதில்லை. பொதுவாக மக்கள் இதுபோன்ற துயரங்கள் தாக்கும் சமயத்தில் தமது தலையெழுத்துக்கு கடவுளையும் மற்ற ஜீவராசிகளையும் குற்றம் கூறுவார்களே தவிர நமது கடந்த காலச் செயல்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து உணர்வது அரிதாக தான் உள்ளது.
ஒருவரின் தலையெழுத்து என்பது, அவனின் ஆசைகள், அவனது கடந்த காலச் செயல்கள், இயற்கையின் செயல்பாடு, கர்ம வினைக்கான காலம் போன்றவை மட்டுமின்றி வேறு சில காரணங்களுடன் கூடி பின்னிப் பினையப்பட்ட ஒரு சிக்கலான முடிச்சு என்றே கூறவேண்டும். இந்தக் காரணங்களின் விளைவுகளைக் கூட்டிக் கழித்த பிறகே அவரவர் அனுபவிக்க வேண்டிய ஒட்டு மொத்த பலன்களே தலையெழுத்து என அறியப்படுகிறது. இந்த தலையெழுத்தை யாராவது மாற்ற முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். இறைவனாலும் முடியாதே என்று சொல்ல கூடியவர்கள். உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டிய நேரம் இது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே திருபுவனம் என்கிற கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கம்பகரேஸ்வரர் என்று அழைக்கப்படும் சபரேஸ்வரர் கோவில். இந்த சபரேஸ்வரர் தான் உங்கள் தலையெழுத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி உங்களுடைய சிக்கலில் இருந்து விடுவித்து அருள் புரிகிறார். இங்கு பிரசித்தி பெற்ற பல கோவில்கள் இருக்க பக்தர்களின் அதிக நம்பிக்கையை கொண்ட கோயிலாக உள்ளது சரபேஸ்வரர் கோவில் தான்.
மனிதன் இந்த கலியுகத்தில் தனக்கு ஏற்படும் துன்பங்களை எல்லாம் போக்கிக் கொள்ளவும், தனக்கு நேரும் அனைத்து ஆபத்துகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் சரணடைய வேண்டிய தெய்வம் சரபேஸ்வரரே. இந்த சபரேஸ்வர் உருவான காரணமும் உண்டு. நாராயணன் இரண்யகசிபுவை வதம் செய்வதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காது திமிரிக் கொண்டிருந்த நரசிம்மனின் உக்கிரத்தை தணிப்பதற்காக அவரை விட உக்கிரமாக வெளிப்பட்ட சிவபெருமானின் வடிவமே சரபேஸ்வர வடிவம் ஆகும்.
சபரேஸ்வரரின் உருவமானது மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை. அதிலும் தங்க நிற பறவையின் உடலும், இறக்கை இரண்டும் மேல் தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழ் நோக்கியும், 4 கால்கள் மேல் நோக்கிய யபடியும், வால் மேல் தூக்கியபடியும், தெய்வத் தன்மை கொண்ட மனிதத் தலையும் சிங்கமுகமும் கொண்டு விசித்திரமாக அருள்பாலிக்கிறார். ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி தேவி ஆகியோர் இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள். சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து பிரத்யங்கிரா தேவி தோன்றி நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் சரபேஸ்வரரின் சக்தியை பற்றி லிங்க புராண குறிப்புகளும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி இவர் நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும்
அழைக்கப்படுகிறார்.
அக்னி தெய்வமாகவும் சரபேஸ்வரரை வணங்குகிறோம். நம்மை பாதுகாக்க நம் கண்களுக்கு புலப்படாத எதிரிகளை அழித்து அபயமளிப்பவர். இவரை வேண்டி வணங்கினால் அனைத்து துன்பங்களிலிருந்தும் தப்பித்து விடலாம். இவரை வழிபட்டால் பில்லி, ஏவல், சூனியம் போன்ற தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபடலாம். தீரா நோயால் பாதிப்புக்குள்ளானாலும் அதிலிருந்தும் விடுபடலாம். இவரை ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தில் வழிபடுவது சிறப்பு. இந்த காலத்தில் நமது கண்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் என்று ஏராளமானது இருக்கிறது. அவற்றை அழிக்க இவரை வழிபடலாம்.
எந்த செயல் செய்தாலும் வெற்றி கிடைக்க வேண்டுமென்றாலும், உடல்நிலை சரி செய்யவும் இவரை வழிபடலாம். அதோடு தரித்தரங்கள் நீங்கவும் இவரை வழிபடலாம். இவரின் சக்திகளான பிரத்யங்கிரா தேவியை வணங்கினால் நமக்கு வரவிருக்கும் ஆபத்து நீங்கும், இன்னொரு சக்தியான சூலினி துர்க்கையின் அம்சத்தை பெற்றிருப்பதால் அனைவரின் நலம் காப்பாள் என்பதால் நாம் செய்யும் காரியங்கள் தடை பட்டால் இவளை வழிபடலாம். இப்படி நமது தலை விதியை மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரரை வழிபட்டு வளமாய் வாழுங்கள்.
[11/10, 8:54 pm] +91 99407 62319: *தனம் தான்யம் பெருக்கி தரும் சப்த கன்னியர்கள்...*
*வரலாறும்*வழிபாடும்*
சப்த கன்னியருக்கு பெண் தெய்வ வழிபாட்டிலும், சக்தி வழிபாட்டிலும் அல்லது கிராம தெய்வ வழிபாடுகளிலும் முக்கிய இடமுண்டு. இந்த சப்த கன்னியர்கள் பிராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகிய ஏழு தெய்வங்கள் தான் என்று போற்றுகிறது புராணம். முக்கியமாக நாம் சப்தகன்னியரை வழிபட்டு வணங்கி வந்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் கொடுத்தல், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் நமது குலம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
இந்த சப்த கன்னியர்களுக்கு இவ்வளவு சிறப்பு ஏன் என்பதை நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம். இந்த ஏழு தேவியரும் தீமைகளை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் நமக்கெல்லாம் அன்னையாகத் திகழும் காரணத்தினால் சப்த மாதர்கள் என்றும் வணங்குகிறோம்.
வழிபாடுகளை பொறுத்தவரையில் சிவா, விஷ்ணு, பிரம்மா என மூன்று தெய்வ வழிபாடு எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது அதேபோன்று தான் சக்தி வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் கருதப்படுகிறது. அந்தகாசுரன் எனும் அரக்கனிடம் இருந்து எண்ணற்ற அரக்கர்கள் உருவாகி இந்த உலகை இம்சை செய்து கொண்டிருந்தார்கள். இந்த அரக்கனை அழிப்பதற்காக ஆண் தெய்வங்களின் இணைகள் சப்த மாதர்கள் என்ற பெண் தெய்வங்களை உருவாக்கி அவர்கள் மூலமாக அரக்கனை அழித்ததாக புராணம் கூறுகிறது.
குறிப்பாக அந்த அரக்கன் கண்ணில் பட்ட தேவர்களையும் முனிவர்களையும் விடாமல் துன்புறுத்தினார்கள். பார்வதி தேவியின் அன்பை பெற்ற காத்தியாயன முனிவரை கொடுமை செய்யும் போது பொங்கியெழுந்த பார்வதி தேவி தான்... அசுரர் படையை அழிக்கக் கிளம்பினாள். அசுரக் கூட்டத்தை ஒழிக்க 7 கன்னியர்களை உருவாக்கினாள். ஏனென்றால் அரக்கர்கள் தவத்தின் பயனாக ஆண் பெண் இணைவின்றி, கருப்பையில் உருவாகும் குழந்தையால் தங்களுக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது என்னும் வரத்தை வாங்கினார்கள்.
பிராம்மி : அம்பிகையின் முகத்தில் இருந்து முதலாவதாக வந்த தேவி. இவள் மேற்கு திசையின் அதிபதியாக இருக்கிறாள். பிரம்மனின் அம்சமானவள்.
மகேஸ்வரி : அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள். மகேஸ்வரனின் சக்தியானவள் இவள்.
வடகிழக்கு என்னும் ஈசானிய திசையை நிர்வகித்து வருகிறாள்.
கெளமாரி : கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகன். ஈசனும் உமையாளும் அழிக்க இயலாதவர்களை அழித்த முருகக் கடவுளின் அம்சமானவள் இவள்.
வைஷ்ணவி : அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள். இவள் விஷ்ணுவின் அம்சம்.
வராஹி : சப்தகன்னிகளில் வித்தியாசமானவள். பன்றி முகத்தைக் கொண்டவள். வராகம் என்பது பன்றியின் அம்சமானது. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று. சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவள்.
இந்திராணி: இந்திரனின் அம்சமானவள்.
சாமுண்டி தேவி : ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி பத்ரகாளியாக வந்தவள் சாமுண்டியாக
சாந்தமானாள். சப்த கன்னிகளில் சர்வ சக்திகளைக் கொண்டிருப்பவள்.
சப்த கன்னியருக்கு, ஆலயங்களில் சந்நிதிகள் அமைந்திருப்பதும், தனிக்கோயில் அமைந்திருப்பதும் வெகு குறைவு தான். ஆனால் சோழப் பேரரசு காலத்தில் கோவில்களில் சப்த மாதர்களுக்கு சந்நிதி எழுப்பப்பட்டு வழிபடும் முறையானது தொடங்கியது. கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவர்களை காவல் தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.
மேலும் இன்றைக்கும் கிராமங்களில் விதை நெல் வைத்து வழிபடும் முறை மிக முக்கியமான பூஜையாக அமைந்திருக்கிறது. சப்தகன்னியர் அமைந்திருக்கும் கோவிலுக்கு செல்லும் போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக் கொண்டால், தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வார்கள் தேவியர் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்
[11/10, 8:54 pm] +91 99407 62319: *பித்ருதோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா.. தோஷம் குறைய இதை செய்யுங்க!*
பித்ருதோஷம் தான் தோஷங்களில் கொடுமையான தோஷம். கடவுளை நேரில் கண்டு வரம் பெற்றாலும் அந்த வரத்தையே தடுக்கும் சக்தி பித்ருதோஷத்துக்கு உண்டு. நமது குடும்பத்தில் இறந்த முன்னோர்களை தான் பித்ருக்கள் என்று கூறுகிறோம். அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையவில்லையென்றால் பித்ருதோஷம் நம்மை தாக்கும். இந்து மதத்தில் பித்ருக்கள் சூட்சுமமாக இருக்கும் பித்ருலோகத்தில் வாழ்வதாக நம்பப்படுகிறது. இவர்கள் குறிப்பாக நம்மை விட்டு நீங்கிய பிறகு இவர்களுக்காக செய்யப்படும் திதி, சாஸ்திரம் தவறாமல் செய்ய வேண்டும். நமது இந்து சாஸ்திரமும் முன்னோர்களின் மன வருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது.
பகீரதன் கங்கையை பூமிக்கு அழைத்து வந்தது கூட தம் முன்னோர்களை சாந்தப்படுத்துவதற்காக தான். அதனால் தான் நம் முன்னோர்கள் நீத்தார் வழிபாடு நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து நம்மை காப்பாற்றினார்கள். பித்ருதோஷம் இருக்கும் வீட்டில் திருமணம் நடக்காது அல்லது மிக தாமதமாக நடக்கும். திருமணம் முடிந்த தம்பதியரிடையே அந்நியோன்யம் இருக்காது. தம்பதியருக்குள் அதிக கருத்து வேறுபாடுகளுடன் விவாகரத்து வரை செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு விபத்து, வேலையின்மை, தொழில் வியாபாரங்களில் நஷ்டம், குடும்பத்தில் சண்டைகள், நிம்மதியில்லாமை இருப்பது எல்லாமே பித்ருதோஷத்துக்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். அவர்கள் வாழும் போது நட்சத்திரம்.. வாழ்ந்த பிறகு திதி என்பததைத் தான் நம்முடைய இந்து மதம் வலியுறுத்துகிறது.
ஒரு மாதம் என்பது இறந்து போனவர்களுக்கு ஒரு நாள் என்கிற கணக்கு தான். அந்த ஒரு நாளில் அவர்கள் இறந்து போன திதி அல்லது அமாவாசை அன்று தான் திருப்தியைத் தேடி நம்மிடம் வருகிறார்கள். அதனால் தான் அந்த நாட்களில் நாம் திவசம் கொடுத்து அவர்களை திருப்திபடுத்த வேண்டும் என்று சொல்வது. அவர்கள் இறந்த போன ஒரு ஆண்டிற்குள் அவர்களது இரத்த சம்பந்தத்தால் 16 முறை திவசம் கொடுக்க வேண்டும் என்று இந்து சாஸ்திரம் சொல்கிறது. இறந்து போனதிலிருந்து 10 வது நாள், 16 வது நாள் காரியம் செய்யப்படும் நாள். பின்னர் 27வது நாள், மாதம் வரும் இறந்த திதி-12, ஒரு வருடம் முடிந்த நிலையில் வரும் திதி என இந்த 16 திவசங்களையும் கொடுத்து அவர்களைத் திருப்திபடுத்திவிட்டால் ஜன்மசா பல்யம் அடையலாம் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. இறந்தவரின் ஒரு வருடம் பூர்த்தியடைவதற்குள் 16 முறை திவசம் செய்வது நல்லது.
வருடம் முடிந்து திதியன்று செய்யப்படும் திவசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய தினம் சூரிய உதயத்துக்குள் இறந்தவரை நினைத்து திதியை முடித்து விட வேண்டும். நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் மிக மிக புனிதமானது என்பதால் அதில் கவனமாக இருந்திட வேண்டும். பிராமணரை அழைத்து விரிவாக செய்ய வேண்டும். முதலில் ஹோமம் வளர்த்து தேவர்களைத் திருப்திபடுத்த வேண்டும். பின்னர் தர்ப்பைப் புல்லில் இறந்து போனவர்கள் மற்றும் அவர்களது முன்னோர்கள் அனைவரையும் மானசீகமாக அழைத்து அவர்களது மேல் பிண்டம் வைத்து அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். உணவளித்த பிண்டத்தை பசுமாடுகளுக்கு கொடுத்து விட்டு, பிராமணருக்கு அரிசி, பலவித காய்கறிகளில் ஒவ்வொன்று என கொடுத்து ஆசி பெற்று, பிறகு இறந்தவருக்கு பிடித்த உணவை படையலிட்டு காக்கைக்கு வைத்து பின்னர் சாப்பிட வேண்டும். இவையெல்லாம் பித்ருக்கள் இறந்த திதியன்று செய்தால் மட்டுமே அவர்களை சேரும்.
அவர்களுக்கு உரிய திதியில் உணவும் தண்ணீரும் இல்லாமல் பசியால் வாடுவதோடு அவர்கள் தாகத்தில் நம்மை சபித்து விடுவார்களோ என்று கேட்பவர்கள் அதற்குரிய பரிகாரம் செய்வது ஓரளவு தோஷத்தை நிவர்த்தி செய்யும். தொடர்ந்து நீங்கள் அந்த திதியில் திவசம் கொடுத்து வந்தால் நாளடைவில் பித்ருதோஷம் நிவர்த்தியாகும். அவர்களது ஆசியும் உங்களுக்கு கிட்டும்.
அமாவாசை நாட்களில் பசுமாடுகளுக்கு வெல்லம், எள்ளு, பச்சரிசி, அகத்திக்கீரை கலந்து கொடுக்கலாம். பொதுவாக திதி கொடுப்பது இறந்தவரின் இரத்த சம்பந்தமான உறவாகவும், அந்தப் பரம்பரையை விருத்தி செய்யும் ஆண்மகனாக மட்டும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் இறந்தவருக்கு ஒரு பெண் மட்டுமே மகளாக இருந்தால் அவர்களும் முன்னோர்களின் ஆன்மாவைத் திருப்திபடுத்தலாம். செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலையில் நெந்மேலி கிராமத்தில் உள்ள ஸ்ரீ லஷ்மி நாராயணப் பெருமாள் கோவிலுக்கு வந்து எல்லோருமே தர்ப்பணம் கொடுக்கலாம். இங்கு திதியை மறந்தவர்களுக்கும், திதி தெரியாதவர்களுக்காகவும் சிரார்த்த சம்ரட்சண பெருமாளே அவர்கள் சார்பில் முன் நின்று திதியை கொடுப்பதாக ஐதிகம்.
பித்ருவேளை பூஜை என்று மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் பெருமாள் ஆராதனம் இருந்து இந்த விரதத்தை ஏற்று கொடுப்பதால் இறந்தவர்களது ஆன்மா சாந்தியடைகிறது என்று நம்பப்படுகிறது. நல்லாயிருக்கணும் என்று வயிறு நிறைந்து மனம் குளிர்ந்து பெரியோர்கள் சொல்லும் ஆசியில் தான் நம்
வாழ்க்கையில் மகிழ்ச்சி திளைக்கிறது என்று நம்பும்போது.. இறந்த பிறகு வயிறு வாடி பசியாலும் தாகத்தாலும் தவித்து வேறு வழியின்றி அவர்கள் அளிக்கும் சாபமும் நம்மை மகிழ்ச்சியாக வாழவிடாது துரத்தும் என்பதையும் நம்பி தான் ஆக வேண்டும்.
இனி வரும் காலங்களிலாவது முன்னோரது இறந்த திதியை கணக்கில் வைத்து தர்ப்பணம் செய்து இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். பித்ருக்களின் மனம் குளிர்ந்த ஆசியினால் மகத்துவமான வாழ்க்கை பெற்று மேன்மையாக வாழ வழி பிறக்கும்.
Comments