மின்மினி மின் மாத இதழ்அறிமுக விழா
மின்மினி அறிமுக விழா ஸ6/10/2022 அன்று மிக சிறப்பாக நிகழ்ந்தது.
ஹைலைட்ஸ்:
நாட்டியஷேத்ரா குழுவினர் பாரதியாரின் பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆடி அழகாக விழாவுக்கு வண்ணம் பூசினார்கள்.
ஊடகத்துறையில் சாதனைப் பெண்மணிகளான
லோகநாயகி
கிரிஜா ராகவன்
ஆண்டாள் பிரியதார்ஷினி
அமுதா தமிழ்நாடன்
அமுதா பொற்கொடி
பத்மினி பட்டாபிராமன்
ஜி.மீனாட்சி
எஸ்.ரேவதி
பார்ன் டு வின் ஸ்வேதா
வான்மதி
ஆகியோர் மிகச் சிறப்பான வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.
மின்னிதழ் அறிமுகத்தின் போது விழாவுக்கு வந்தவர்களுக்கு முதல் இதழின் அச்சுப் பிரதிகள் வழங்கப்பட்டது.
மாலன், சுபா, தேவிபாலா, என்.சி.மோகன்தாஸ், ரவி தமிழ்வாணன், இயக்குனர் மணி பாரதி, இயக்குனர் ஏ.வெங்கடேஷ், இயக்குனர் சுமிரத்னம், கவிஞர் தேவரசிகன், ஓவியர் ஷியாம், ஓவியர் தமிழ் உள்ளிட்ட பல ஆளுமைகள் நேரில் வந்திருந்து வாழ்த்தியது சிறப்பு.
பட்டுககோட்டை பிரபாகர் அவர்களின் பத்து ரசிகர்களுக்கு மேடையில் கெளரவம் செய்யப்பட்டது.
பல பரிசுகளில் அவரையும் அவரது மனைவியையும் பென்சில் ஓவியமாய் தந்த தஞ்சாவூர் ஓவியர் மற்றும் ரசிகரான அகல்யாவின் அன்பும் ஓவியர் தமிழின் ஓவிய அன்பும் நெகிழ்ச்சியை அனைவருக்கும் தந்தது.
நிகழ்ச்சியை அவரின் இளைய மகள் ஸ்வர்ண ப்ரியா தொகுத்தார்.
வெளியீட்டாளர் லதா சரவணன் நிகழ்ச்சியைத் திட்டமிட்டபடி துல்லியமாய் செயல்படுத்தினார்.
அவரின் மகள்கள் அபிதா மற்றும் அனிதா மேடை நிர்வாகம்.
Comments