தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
🪔🙏💐🎁🎂💓💖💝🎊❣️🪔
வளைந்து நெளிந்து
அபிநயம் காட்டி
காற்றின் கொன்னக்கோளுக்கு ஏற்றபடி
நடனமிடம் தீபமே
ஆதி நர்த்தகியே
உன்னை வணங்குகிறேன்.
🪔
விளக்கில் வசிக்கும் தேவதைகள் காத்திருப்பது
விளக்கேற்றும் தேவதையின் வருகைக்காக.
🪔
கூர்ந்து கவனி
தீபம் பேசுகிறது.
🪔
தீயின் புன்னகை
தீபம்.
🪔
திரி காம்பு
சுடர் மொட்டு.
🪔
வெளியே எத்தனை
விளக்குகள் எரிந்தாலும்
உன்னைப் பிரகாசமாக்குவது
உனக்குள் எரியும் சுடர்தான்.
🪔
ஒரு விதைக்குள்
எத்தனை மரங்களோ
ஒரு சுடருக்குள் எத்தனை விளக்குகளோ?
🪔
ஒளி இல்லாமல்
ஒளிவட்டம் இல்லை.
🪔
உன் வானில்
நீயே கிழக்கு
உன் பாதைக்கு
நீயே விளக்கு.
🪔
நீ விளக்கென்றால்
இன்னொரு விளக்கை
ஏற்றி வை.
🪔
ஊனுடம்பு அகல்
எண்ணெய் குருதி
நாடி நரம்பாகும் திரி
மூன்றையும் வசமாக்கி
ஆடிக் களித்து
நின்று ஒளிரும் அறிவே சுடர்.
🪔
விளக்கில் படி
விளக்கையும் படி
விளக்காக வேண்டும் நீ.
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்! அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பின் ஒளி பரவட்டும்... மகிழ்ச்சியும் இனிமையும் எங்கும் நிறையட்டும்!
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔💝
( கவிதைகள் என் 'இருளும் ஒளியும்' நூலில் ஒளி எனும் தலைப்பில் இருப்பவை )
*
அன்புடன்
Comments