ஈசனே ஏழுமலை வாசனே

 


ஈசனே ஏழுமலை வாசனே

ஈடில்லா திருமலை நாதனே !
குபேரனுக்காக அன்று கடன்பட்டாய்
திருமகள் அகன்று துயருற்றாய் !
வகுளாதேவியின் திருமகனானாய் !
எமக்காக நிரந்தர திருவுருவானாய் !
எத்திசையில் நாம் வாழ்ந்தாலும் துயர் தீருமே
உன் திசை வணங்கி கோவிந்தா என்றதுமே !
கலியுக தெய்வம் நீ
தவறிழைத்தால் தடுக்கவும் செய்வாய் ! கருணைப்பார்வையால் தாங்கியும் பிடிப்பாய்!
உன் அருளன்றி இங்கு எவ்வித அசைவுமில்லை!
உன் வரமின்றி வாழ்வில் வசந்தமும் இல்லை!
பக்தருக்காய் ஓய்வின்றி சேவைசாதிக்கிறாய் !
பதமலர் பற்றிட
படியாக பிறப்பெடுக்கவும் யாமறியோம்!
பரம்பொருளே நாடகமாய் உன் லீலைகள்
பதி உன் நாமமே கரைத்திடும் எம் கவலைகள் !
யாதுமே நீயல்லவா!
யாவருக்கும் நீ அருளவேண்டியது நின் கொடையல்லவா!
கட்டண தரிசனமும் மாறிடுமோ !
ஏங்கிடவே தரிசனமும் கிட்டுடுமோ !
பிணியறுந்திடுமோ பிறவிக்கடல் கடந்திட ! 😥
என்று தீருமோ கண்ணார கண்டிட ஏக்கம்
எப்போதும் சிந்தையில் வைத்திடு உன் திரு நாமம் !
உனைச்சேரும் காலம்கண்டே கழிந்திடுமோ பிறவிகள்!
உன்னருள் அன்றியே அவையும் அறுந்திடுமோ!
நின் தாள் வணங்கியே நின்றிடுவோம் சேயாய்!
அன்னையாய், அருட்கடலாய் அரவணைத்து காத்திடுவாயே !Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,