வெள்ளிமலை மன்னவா வேதம் நீ யல்லவா

 


வெள்ளிமலை மன்னவா வேதம் நீ யல்லவா ,இந்த பச்சைகிளிக்கொரு செவ்வந்தி பூவை கட்டிலில் கட்டிவைத்தேன் போன்ற பாடல்களை பாடிய எஸ் வரலக்ஷ்மி தான் மகாலிங்கத்துடன் பல காலம் முன் வாழ்ந்தார்.

இருவரும் அப்போது திரையுலக பிரபல ஜோடி என அறியப்பட்டிருந்தார்கள். பாடல்சத்தமாக ஒலிக்கும் நடிகர் மகாலிங்கம் காரில் வரலக்ஷ்மியும் சேர்ந்து ஸ்டூடியோவுக்கு போவதை ரசிகபெருமக்கள் சாலையோரங்களில் நின்றபடி பார்த்து கையசைத்து வாழ்த்துவது தினம் பார்க்க கிடைக்கும் காட்சியாம்.
அப்போது மகாலிங்கத்திடம் 'பிலிம்ரெப்ரசெண்டேடிவ்'வேலை பார்த்தவர் ஏ.எல்.சீனிவாசன் . கண்ணதாசனின் அண்ணன். பின்னாளில் சாரதாஸ்டூடியோ, ஏ.எல்.எஸ் புரடக்சன் என முதலாளியானவர்.
வாழ்க்கை விந்தையானது. பல வினோத திருப்பங்கள் நிறைந்தது.
டி ஆர் மகாலிங்கம் எஸ் வரலக்ஷ்மி நட்சத்திர ஜோடி பிரிந்தது. மகாலிங்கம் தயாரித்த இருவரும் இணைந்து நடித்த படங்கள் தோல்வியடைந்ததும் அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் மன வேறுபாடுக்கு காரணமாக இருந்திருக்கும்.
சில காலத்திற்கு பின் எஸ் வரலக்ஷ்மி நடிகர் மகாலிங்கத்திடம்முன்பு பிலிம் ரெப் வேலைபார்த்த
ஏ எல் சீனிவாசனின் மனைவியானார். அவருடனேயே வாழ்ந்தார்.
கண்ணதாசன் "மாலையிட்ட மங்கை "(1958)படத்தை
டி ஆர் மகாலிங்கத்தை கதாநாயகனாக்கி தயாரித்தார்.
வரலக்ஷ்மி சிவாஜியின் ஜோடியாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்தார்.
கே எஸ் ஜி யின் பணமா பாசமா (1968)படம்
எஸ் வரலக்ஷ்மியை 'அம்மா'நடிகையாக பிரபலமாக்கிவிட்டது.
நட்சத்திர ஜோடி டி.ஆர் மகாலிங்கம்-எஸ்.வரலக்ஷ்மி பிரிந்து தலைமுறை காலங்களுக்கு பின்
ஏ பி நாகராஜன் இயக்கத்தில்
ராஜ ராஜ சோழன் படத்தில் டி ஆர் மகாலிங்கமும்
எஸ் வரலக்ஷ்மியும் ஒன்றாக பாடி நடித்தார்கள்.
"நஞ்சை கழனிகளின் நாயகனே நீ வாழ்க "சீர்காழி பாடுவது
"நடனமிடும் காவேரி காவலனே நீ வாழ்க "டி ஆர் மகாலிங்கம்
"தஞ்சமென வந்தோர்க்கு தஞ்சம் வழங்கும் தஞ்சை பெருவுடைய சோழனே நீ வாழ்க "எஸ் வரலக்ஷ்மி தொடர்ந்து பாடுவது,
பின் சீர்காழி,மகாலிங்கம்,எஸ் வரலக்ஷ்மி மூவரும் சேர்ந்து "வெஞ்சமரில் வெற்றி கண்டு அஞ்சலிக்கும் மக்களுக்கு விண்ணுயர் பெரியகோவில் தந்த வீர ராஜ ராஜ சோழனே நீ வாழ்க !"
"தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே !"
ஆனால் இந்த படம் வந்த காலங்களில் ஏ.எல்.எஸ் மனைவியாகவே எஸ்.வரலக்ஷ்மி அறியப்பட்டிருந்தார்.
-ஆர். பி.ராஜநாயகம்
இணையத்தில் இருந்து எடுத்தது
………………..

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,