அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கரு ணை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கரு ணை
உள்ளத்தில் தூய்மையும், புறத்தே வெள்ளாடை உடுத்தி சமய சமரச சுத்த சன்மார்க்கத்தை நமக்கெல்லாம் போதித்து மக்கள் மனதில் போற்றப்படுபவராய் வாழ்ந்தவர் தான் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்.
1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஐந்தாம் நாள் இராமையா பிள்ளை சின்னம்மை இவருக்கு மகனாக பிறந்தார் இராமலிங்கர்.
இவரது சகோதரர் சபாபதி அவர்கள், இராமலிங்கர் நன்றாக படிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் சபாபதி முதலியார் அவர்களின் பாடசாலைக்கு கல்வி கற்க அனுப்பினார்.
ஆனால் இராமலிங்கருக்கோ, படிப்பறிவில் நாட்டம் இல்லை .காஞ்சி கந்தகோட்டை முருகனைப் பாடுவதையறிந்த ஆசிரியர் சபாபதி முதலியார், இராமலிங்கரிடம் ஆன்மீக உணர்வு இருப்பதைக் கண்டு வியந்து,இவர் ஒரு தெய்வப் பிறவி என நினைத்தார்.
பின்னர் இவரது சகோதரரிடம், இராமலிங்கரை படிக்க வற்புறுத்தாமல், அவரது போக்கிலே விட்டு விடச் சொன்னார்.
இராமலிங்கருக்கு அவர்கள் சகோதரர் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தார். இவர் தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாத துறவியாகவே வாழ்ந்து வந்தார்.
கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர்ப்பலியை தடுத்து நிறுத்தினார். மக்களின் பசியை போக்குவதற்காக தர்ம சாலையை தொடங்கினார்.
சமய சமரச சன்மார்க்கம், சத்திய ஞான சபை போன்றவைகளை நிறுவினார்.
இறைவன் தன்னுள் இருப்பதை, தான் எழுதிய ஆன்மீக நூலான திருவருட்பா மூலம் உணர்த்தினார்.
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கிறான் - பண்ணில்
கலந்தான் என் பாட்டில் கலந்தான்
உயிரில் கலந்தான் கருணை கலந்து.
எவருக்கும் புரியும்படி, இன்பம் பெறுக எளிதாய் பாடல்களை எழுதியவர் இராமலிங்கர்.
வடலூரில் இவர் பற்ற வைத்த அடுப்பு இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.
1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வடலூரில் சோதியானார் என்பது நாம் அறிந்த வரலாறு.
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் நினைவு முன்னிட்டு, 200 ஆம் ஆண்டு கொண்டாடும் அரசுக்கு நன்றியுடன் வணக்கங்களும்.
முருக. சண்முகம்,
அய்யப்பன் தாங்கல் சென்னை -56
Comments