நானாக இருக்கவே விரும்புகிறேன்!


 நானாக இருக்கவே விரும்புகிறேன்!

நான் ஒருசில படங்கள்ல பாவாடை, தாவணி போட்டு நடிச்சேன். பிறகு முழுக்கவே புடவைதான். மாடர்ன் உடைகள் பயன்படுத்தினதேயில்லை. 1950-1975 வரை முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடியா நடிச்சேன். 150 படங்களுக்குமேல நடிச்சிருப்பேன். 1980-களில் ரஜினி, பிரபுனு பல ஹீரோக்களுக்கும் அம்மாவா நடிச்சேன். 1960-களில் எங்க வீட்டில் 15-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தோம். அப்போ தேனாம்பேட்டையில் எங்க வீடு. விடியற்காலை எழுந்து, மெரினா பீச்சுக்கு வாக்கிங் போவேன். அப்போதும் சரி... இப்போதும் சரி... வீட்டு வேலைகளை நானே செய்வது வழக்கம். நடிகைங்கிற பிம்பம் என் நிஜ வாழ்க்கையில் வந்ததில்லை. பகட்டான தோரணையுடன் இருந்ததில்லை. என் இயல்பான குணங்களுடன், நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்.
கடைசியாக, `காதல் சடுகுடு' படத்தில் நடிச்சேன். பிறகு சினிமாவை விட்டு விலகி, தனிமை வாழ்க்கையில் அடைக்கலம் ஆகிட்டேன். பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளுக்கும் போவதில்லை. என் பிள்ளை ரவிக்குமார் குடும்பத்தினர் மற்றும் சொந்தக்காரங்க அடிக்கடி என்னை வந்து பார்ப்பாங்க. மத்தபடி, டி.வி பார்க்கிறதுதான் என் பிரதான பொழுதுபோக்கு. இந்த அமைதியான வாழ்க்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. `கற்றுக்கொள் கற்றுக்கொடு! ஏமாறாதே ஏமாற்றாதே! வாழு வாழவிடு!' - என் வாழ்வில் அனுபவ ரீதியா கடைப்பிடிச்ச, எல்லோருக்கும் ஆட்டோகிராபில் நான் எழுதிக்கொடுக்கும் வாசகம் இது. இந்த வாக்கியத்திலேயே என் வாழ்க்கைப் பயணமும் அடங்கியிருக்கு. நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக சந்தோஷப்படுகிறேன்!''
எம்.ஜி.ஆரும் நானும் வாங்கின ஓட்டுகள்!
1960-களில், ஒவ்வோர் ஆண்டும் வெளியான தமிழ்ப் படங்களில் தங்களுக்குப் பிடிச்ச படம், நடிகர், நடிகைகளை மலேசியா, சிங்கப்பூர் ரசிகர்கள் தேர்வு செய்வாங்க. அது அப்போ பெரிய கெளரவமா இருக்கும். 1968-ம் ஆண்டுக்கான போட்டியில, 34,938 வாக்குகள் பெற்று எம்.ஜி.ஆர் அண்ணன் சிறந்த நடிகராகவும் 23,493 வாக்குகள் பெற்று நான் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டோம். அந்த வெற்றித் தகவலை அறிந்த எம்.ஜி.ஆர் அண்ணன் உடனே போன் செய்து, எனக்கு வாழ்த்து சொன்னார். ரொம்ப சந்தோஷமான தருணம் அது!
வைரமுத்துவுக்கு நன்றி!
என் சுயசரிதையை, 2008-ம் ஆண்டு, ஒரு முன்னணி தினசரி பத்திரிகையில் தொடராக எழுதியிருந்தேன். அதைப் படிச்சுட்டு, கவிஞர் வைரமுத்து எனக்கு போன் செய்தார். `நீங்கள் குறிப்பிட்டிருந்த, `சென்ற ஜென்மம், அடுத்த ஜென்மத்தில் நம்பிக்கையில்லை. வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஜென்மத்தை மட்டுமே நம்புகிறேன்' என்ற வரிகள் நெகிழ்ச்சியாக இருந்தன; எனக்கு மிகப் பிடித்திருந்தது'னு சொன்னதுடன், ஒரு கடிதமும் அனுப்பினார். அந்தத் தருணத்தில் அவரின் பாராட்டு எனக்குப் பெரிய ஆறுதலா இருந்துச்சு. இந்தப் பேட்டியின் வாயிலாக அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.
- நடிகை விஜயகுமாரி
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,