#எழுத_மறந்த_சொற்கள்/ஆத்மாஜீவ்
#எழுத_மறந்த_சொற்கள்
எழுத மறந்த சொற்களெல்லாம்
கனவில் நனவில் இனி நுழையக்கூடாது
காலம் தின்று சாகட்டும் கவலையில்
மனசைத் தூக்கி தெருவில் அலைந்து
இடிந்து அமரும் இடத்தில் போய்
கூடிநின்று கூத்தடிப்போம் இனி.
ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம் கண்டு
சிரிக்காமல் இருக்க முடியவில்லை
வாய்விட்டு சிரித்தேன்.
அத்தனை சொற்களும் அவசரமாக
திரும்பிப் பார்த்தன.
“என்னவாம் சிரிப்பு
எங்களைப் பார்த்து"
முட்டாள் சொற்களே இப்போதும் என்
நனவில் நடுவில் நின்றுதான்
திட்டம் தீட்டுகிறீர்கள் என்றேன்.
அத்தனைச் சொற்களும்
ஆசையுடன் ஓடிவந்து
கட்டி அணைத்தபடி
கன்னத்தில் முத்தமிட்டன.
Comments