இந்து மதத்திற்கு எதிராக பேசினால் பல கோடி கிடைப்பதாக சொன்ன ஜெயமோகன்..

 


இந்து மதத்திற்கு எதிராக பேசினால் பல கோடி கிடைப்பதாக சொன்ன ஜெயமோகன்.. ஆதாரம் கேட்கும் கரு.பழனியப்பன்!


சென்னை: இந்து மதத்தை எதிர்த்து பேசினால் சென்னையில் வீடும் பல கோடி ரூபாய் பணமும் கிடைப்பதாக பேசிய எழுத்தாளர் ஜெயமோகன், யாருக்கு அதுபோல் வீடும் பணமும் கிடைத்தது என்ற பெயரை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினிமா இயக்குநர் வெற்றிமாறன், ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றிவிட்டார்கள் என்று கூறியதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் வந்தன.
இந்த நிலையில் ஏக்நாத் எழுதிய "அவயம்" நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சினிமா இயக்குநரும், நடிகரும், பேச்சாளருமான கரு.பழனியப்பன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்த நாவலில் வரும் மாடசாமி, கம்யூனிஸ்டு கட்சியை விட்டு திமுகவுக்கு செல்கிறார்.
அவர் திமுகவுக்கு சென்றபோது பேசுவதற்கு பணம் கொடுத்தால், இருக்கட்டும் வேண்டாம் என்கிறார். ஏனென்றால் அவருக்கு வாங்கி பழக்கமில்லை. இதைப் போன்ற ஆட்களை போற்ற வேண்டும். அமெரிக்க நாவலாசிரியர் ஏர்னெஸ்ட் ஹெம்மிங்வே எழுதியே சம்பாதித்து சந்தோசமாக இருந்தவர்.
அவர் தினசரி காலை 20 நிமிடங்கள் மட்டுமே எழுதுவார். அடுத்த முழு நாளும் அவர் எழுத மாட்டார். இப்படி ஒரு தமிழ் எழுத்தாளன் வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும். இப்படி யாராவது ஒருவன் எழுத்தாளன் ஆவான் என்று தெரிந்தால் கடைசியில் ஜெயமோகனைபோல் ஆகிவிடுகிறார்.
இந்து மதத்துக்கு எதிராக பேசுவர்கள் எல்லாம் சென்னை வீடு வாங்கி இருந்துவிட்டார்கள் என்று ஜெயமோகன் பேசுகிறார். புளிச்சமாவுக்கு சண்டை போட்ட நீங்கள் இதை பேசலாமா. 20 ரூபாய் பாக்கெட் மாவுக்கு சண்டைபோட்டவர் நீங்கள். அதாவது இந்து மதத்துக்கு எதிராய் பேசுபவர்களுக்கு எல்லாம் கோடிகோடியாக பணம் வருகிறதாம்.
பெயரை சொல்லுங்கள்
அவர்கள் யார் என்று ஜெயமோகன் தனக்கு தெரியும் என்கிறார். தெரியும் தெரியும் என்று கூறும் நீங்கள், யார் இதுபோல் வாங்கி இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். சும்மா போகிற போக்கில் சேர்க்கை சரியில்லாமல், அவர்கள் எத்தனை கோடி பணம் வாங்கி இருக்கிறார்கள். பெயர் சொல்லுங்கள். நான் எப்போதாவது பெயர் சொல்லாமல் பேசுகிறேனா. நீங்கள் ஏன் பெயர் சொல்லாமல் பேசுகிறீர்கள்?' என்றார்.By Noorul Ahamed Jahaber Ali

நன்றி: ஒன்இந்தியா தமிழ்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி