தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு சைக்கிள் பியூர் வழங்கும் கல்வி உதவித்தொகைகள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு சைக்கிள் பியூர் வழங்கும் கல்வி உதவித்தொகைகள்
~ ரூ.10 இலட்சம் மதிப்புள்ள இந்த வருடாந்திர ஸ்காலர்ஷிப் திட்டம், 40 இளம் மாணவிகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் ~
சென்னை: 11 அக்டோபர் 2022: சைக்கிள் பியூர் அகர்பத்தி தயாரிப்பாளரும் மற்றும் ஊதுபத்திகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாகவும் திகழும் N. ரங்கா ராவ் & சன்ஸ், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள 40 மாற்றுத்திறனாளி பெண் மாணவிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்புள்ள ஐந்து ஆண்டுகள் காலஅளவிற்கான கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) திட்டம் தொடங்கப்படுவதை இன்று அறிவித்திருக்கிறது. 12 முதல் 17 ஆண்டுகள் வயதிற்கு இடைப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் மாணவிகள் இந்த ஸ்காலர்ஷிப்பை பெறுவார்கள்.
இம்மாநகரில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பு நிகழ்வின்போது சைக்கிள் பியூர் அகர்பத்தியின் நிர்வாக இயக்குனர் திரு. அர்ஜுன் ரங்கா கலந்துகொண்டு மொத்தமுள்ள 40 ஸ்காலர்ஷிப்களில் 8-ஐ இதற்கான தகுதியுள்ள மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கினார். இம்மாநிலத்தில் மாற்றுத்திறனுள்ள இளம் மாணவிகள் எஞ்சியுள்ள கல்வி உதவித்தொகைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். “நமது நேரம் இப்போது – நமது உரிமைகள், நமது எதிர்காலம்” என்பது இந்த ஆண்டுக்கான சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. உலகமெங்கும் அனுசரிக்கப்படும் இந்த தினத்தை, மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தின் மூலம் N. ரங்கா ராவ் & சன்ஸ் நிறுவனம், தனது பங்களிப்பை வழங்கி அக்கொண்டாட்டத்தில் இணைந்திருக்கிறது.
இந்நிகழ்வின்போது K.S. சுசித்ரா, சதீஷ் குமார், வித்யா மோகன், ரியா மனோஜ், நிதிஷ் குட்டி, மீரா கிருஷ்ணன், ஆனந்த செல்வன் மற்றும் சுவாதி ஷர்மா ஆகிய பிரபல தொலைக்காட்சி நடிகர்கள் நடித்திருக்கும் தொலைக்காட்சி விளம்பர திரைப்படமும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொலைக்காட்சி விளம்பர படத்தை காலம்சென்ற ரு. சண்முகம் அவர்கள் இயக்கியிருந்தார். இந்நிகழ்வில் காலம் சென்ற திரு. சண்முகத்தின் அம்மா திருமதி. உலகம்மாள், அவர் சார்பாக கலந்து கொண்டார்.
கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் பற்றி பேசிய திரு. அர்ஜுன் ரங்கா, “பெண் குழந்தைகளின் முன்னேற்றத்தின் மீதும் மற்றும் தரமான கல்வியைப் பெறுவதற்கான வசதிகளைப் பெறும் வகையில் அவர்களை திறனதிகாரம் பெறச்செய்வது மீது நாங்கள் வலுவான உறுதி கொண்டிருக்கிறோம். இந்த முனைப்புத்திட்டம், நிதிசார் சவால்களை கணிசமான அளவிற்கு சமாளிப்பதற்கு திறன் உள்ளவர்களாக அவர்களை உயர்த்தும் இந்த கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான பெண் குழந்தைகள், கல்விச்செலவை எதிர்கொள்ள இயலாத நிலையிலுள்ள வசதி குறைவான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். இந்த ஸ்காலர்ஷிப்பிற்காக நாங்கள் ஏற்கனவே அடையாளம் கண்டிருக்கின்ற 8 பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் கடும் சிரமத்தோடு வாழ்க்கையை நடத்தும் தினக்கூலித் தொழிலாளிகளாக இருக்கின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு கல்வி வசதியை வழங்குவது என்பது இவர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்திருக்கிறது.” என்று கூறினார்.
“இந்த ஸ்காலர்ஷிப்களின் எண்ணிக்கையை நாங்கள் அதிகரிக்கவிருக்கிறோம். மேலும் இத்திட்டத்தின் மூலம் பலன் பெறக்கூடிய அதிக அளவிலான குழந்தைகளை சென்றடைவதை குறிக்கோளாக கொண்டிருக்கும் ஒரு வருடாந்திர நிகழ்வாக இதனை நாங்கள் மாற்றவிருக்கிறோம்.” என்று மேலும் கூறினார்.
வசதியற்ற சமூகத்தினரை முன்னேற்றம் அடையச் செய்வது மீதும் மற்றும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவது மீதும் சிறப்பு கவனம் செலுத்தும் நடவடிக்கைகளின் மூலம் சமூகத்திற்கு சேவையாற்றுவதில் N. ரங்கா ராவ் & சன்ஸ் பெருமை கொள்கிறது. இந்நாட்டிலுள்ள ஊனமுற்ற / மாற்றுத்திறனாளி பெண்களுக்கும் சமவாய்ப்புகளை வழங்கவேண்டுமென்ற தனது தொடர்ச்சியான செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வருடாந்திர ஸ்காலர்ஷிப் செயல்திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த கல்வி உதவித்தொகையைப் பெற விரும்புகின்ற, தகுதியுள்ள மாற்றுத் திறனாளி மாணவிகள் / அவர்களது பெற்றோர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விவரங்களோடு umabai.ck@nrrs.net என்ற மின்னஞ்சல் அனுப்பலாம். அதைத்தொடர்ந்து விண்ணப்பித்தவர்களை NR குழும பிரதிநிதிகள் தொடர்புகொள்வார்கள்.
Comments