புனித் ராஜ்குமார்
கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகனும், டாப் ஹீரோ சிவராஜ்குமாரின் தம்பியுமான புனித் ராஜ்குமார், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.


அதன் பிறகு 2002-ஆம் ஆண்டு வெளியான ‘அப்பு’ தான் புனித் கதையின் நாயகனாக நடித்த முதல் படம். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு புனித் ராஜ்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அபி, வீர கன்னடிகா, மௌரியா, ஆகாஷ், அஜய், அரசு, வம்ஷி, ராம், ப்ரித்வி, ஜாக்கி, பரமாத்மா, அண்ணா பாண்ட், பவர், ரண விக்ரமா, சக்ரவியூகா, ராஜகுமாரா, அஞ்சனி புத்ரா, யுவரத்னா’ என கன்னட படங்கள் குவிந்தது.


1999-ஆம் ஆண்டு அஷ்வினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் புனித் ராஜ்குமார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு (2021) இதே அக்டோபர் 29-ஆம் தேதி திடீரென புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.


அடிசினல் சேதி : 


அவர் உயிரோடு இருந்தவரை  45 இலவச பள்ளிகள், 26 அனாதை இல்லம், 16 முதியோர் இல்லங்கள், 1800 மாணவர்களின் கல்வி உதவி செய்து வந்தார்


இறந்த பின்னர், 2 கண்களை தானம் செய்துள்ள உயர்ந்த மனிதன் புனித் ராஜ்குமார் மறைந்த இதே நாளில்  ஆந்தை சினிமா அப்டேட்ஸ் அவரைப் போற்றி வணங்குகிறது .


 🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்