தயிர் vs மோர்: எது பெஸ்ட்? எது அதிக நன்மை தரக்கூடியது?*

 


தயிர் vs மோர்: எது பெஸ்ட்? எது அதிக நன்மை தரக்கூடியது?*


பெரியவர்கள் முதல்  சிறியவர்கள் உட்பட அனைவருக்கும் பிடித்த உணவு தயிர். தயிர் இல்லையெனில் ஒருசிலருக்கு மதிய சாப்பாடு சிறப்பாகவே அமையாது. அதே நேரத்தில் பலரது வீடுகளிலும், விழாக்களின் போதும் விருந்து சாப்பாட்டில் மோர் தான் அதிகளவில் இடம் பெறுகிறது. வெயில் கொளுத்தும் கோடை காலத்திலும் குளிர்ச்சிக்கும், தாகத்திற்கும் குடிக்க பலருடைய தேர்வாகவும் மோர் தான் இடம் பிடிக்கிறது. தயிரில் இருந்து தானே மோர் தயாரிக்கப்படுகிறது என்று சிந்தித்தாலும், மோருக்கு மட்டும் ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை நாம் இங்கு காணலாம்.


தயிர் vs மோர்


பொதுவாகவே உடல்சூட்டைத் தணிக்கவும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் அதிகளவில் பரிந்துரைக்கப்படும் உணவு தயிர்சாதம் தான். அதே நேரத்தில் உடல்சூட்டைக் கிளப்பி விடும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. தயிர் சாதம் நம் உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பதில்லை. மாறாக, தயிரில் உள்ள நொதித்தல் தன்மை காரணமாகத் தான் இது நம் உடலை குளிர்ச்சியாக்குவதற்குப் பதிலாக சூடாக்கி விடுகிறது. செரிமானம் ஆகவும்  நேரம் ஆகிறது. தயிரில் தண்ணீர் சேர்த்த ஒருசில நிமிடத்திலேயே நொதித்தல் தன்மை நின்று விடக் கூடும். ஆகவே, தயிரை விடவும் மோர் அதிக குளிர்ச்சியூட்டும் தன்மையை கொண்டுள்ளது. சாதமாகச் சாப்பிடும் போது தயிரைப் பயன்படுத்தலாம், அதில் தவறேதுமில்லை என மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர்.


தயிரை யார் தவிர்க்க வேண்டும்?


தயிரில் உள்ள லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் நமது குடலைச் சென்றடையும் நேரத்தில், ​நமக்கு செரிமானம் உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. ஆனால், உடல் பருமன், இரத்தப்போக்கு மற்றும் அழற்சி பிரச்னைகள் போன்ற பல பாதிப்புகள் இருந்தால் தயிரை தவிர்க்க வேண்டியது அவசியம். சளி, இருமல், சைனஸ் மற்றும் செரிமான கோளாறு உட்பட பல்வேறு பிரச்னை உள்ளவர்களும் இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரவில் தயிரை சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள், ஒரு சிட்டிகை மிளகு அல்லது வெந்தயத்தை சேர்ப்பது ஆரோக்கியத்தை  மேம்படுத்த உதவும். தயிரை சூடாக்கும் சமயத்தில், அதிலுள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அழிய வாய்ப்புள்ளதால், சூடுபடுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.


மோர் குடிப்பதன் பயன்கள்


கிராமப் பகுதிகளில் அமிர்தத்திற்கு சமமாக மோர் பார்க்கப்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீருடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை அடித்து, சிறிதளவு சீரகப் பொடி, உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து குடிக்கும் போது அதன் சுவையே தனிச்சிறப்பு. அதே நேரத்தில், தயிரில் தண்ணீரைக் கலந்து, அதை மோர் என்று பயன்படுத்துபவர்களும் உள்ளனர். தயிரைக் கடைந்து, அதிலிருந்து வெண்ணையைப் பிரித்தெடுத்தால் கிடைப்பது மட்டுமே மோர்.


துவர்ப்பு மற்றும் புளிப்புச்சுவையுடன் கூடிய மோர் செரிமானம் அடைய எளிதானது. கால்சியம் குறைபாடு, வயிற்றில் உண்டாகும் எரிச்சல்,பசியின்மை, வாய்ப்புண், வயிற்றுப்புண், இரைப்பை குடல் கோளாறுகள் மற்றும் இரத்தச்சோகை உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கும் மோர் தீர்வாக அமைகிறது. உடலிலுள்ள தேவையற்ற கழிவுகள், மோர் குடித்தால் வெளியேறும். மோர் குடிப்பதால் செரிமானமும் மேம்படுகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,