:சீனா-வில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்! ஒரேநாளில் 40ஆயிரம் பேர் பாதிப்பு! காரணம் என்ன?

 :சீனா-வில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்! ஒரேநாளில் 40ஆயிரம் பேர் பாதிப்பு! காரணம் என்ன?*




சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஒருபுறம் அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள், மறுபுறம் கொரோனா பரவல் உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.*


சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஒருபுறம் அரசின் கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள், மறுபுறம் கொரோனா பரவல் உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.


சீனாவில் இன்று(திங்கள்கிழமை) ஏறக்குறைய 40ஆயிர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்று அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


சீனா தேசிய சுகாதார ஆணையம் வெளியி்ட்ட தகவலில், “ சீனாவில் இன்று ஒரேநாளில் 39,452 பேர் கொரோனாவில் பதிக்ககப்பட்டனர், இதில், 36,304 பேருக்கு அறிகுறியில்லாத கொரோனா இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.


தலைநகர் பெய்ஜிங்கில் மட்டும் 4ஆயிரம் பேர் கொரோனாவ்ல பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே சீனாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் வெகுண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அரசுக்கு எதிராகவும், அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர்.


ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உருமி நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில்ஏ ற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரழந்தனர். உருமி நகரில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தியதால், தீதடுப்புபடையினர் வரமுடியாமல் உயிரிழப்பு ஏற்பட்டது.


China reports a sharp increase in COVID-19 cases :what is the reason? protests against Xi Jinping 

இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நூற்றுக்கணக்கானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர், அப்போது அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலகக் கோரி கோஷமிட்டனர்


பெய்ஜிங் நகரில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகம், நான்ஜிங்கில் உள்ள கம்யூனிகேஷன் யுனிவர்சிட்டியும் மாணவர்களும் போராடத்தில் குதித்துள்ளனர். இது தவிர குவாங்டாங், ஹெங்ஹு,ஹாசா ஆகிய நகரங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.


ஜப்பானின் நோமுரா செய்திகளின்படி சீனாவில் கடைபிடிக்கப்படும் கடும் லாக்டவுன் நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளால் 41.20 கோடிபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஜிடிபியில் ஐந்தில் ஒருபகுதி லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.


உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால், தீவிரமான ஆராய்ச்சிக்குபின், நவீன தொழில்நுட்பங்ககளைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை, அதிக வீரியம் நிறைந்தவை. இதனால், கொரோனாவு வைரஸுக்கு எதிராக மட்டுமின்றி, அதன் திரிபுகளான ஒமைக்ரான் உள்ளிட்ட அதன் திரிபுகளுக்கும் எதிராக சிறப்பாகச் செயல்படுகின்றன. குறிப்பாக உயிரிழப்புகளை 99 சதவீதம் குறைத்துவிட்டன. பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிதாக இல்லை. 


ஆனால் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் பழங்கால தொழில்நுட்பத்தில் இறந்த வைரஸின் ஸ்பைக்புரதத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. இதன் வீரியம் என்பது குறைவு என்பதால், அங்கு பாதிப்பு நீடித்து வருகிறது என அறிவியல் வல்லுநர்கள் தெரிவி்க்கிறார்கள்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,